தமிழர்களை மறந்த வெளிநாட்டு இந்தியர் துறை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவைப் பற்றிய லேட்டஸ்ட் நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஓவர்சீஸ் இந்தியன் என்ற இணைய தள பத்திரிக்கையை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின், வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை சார்பில் இந்த இணைய தள பத்திரிக்கை (www.overseasindian.in) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாதாந்திர பத்திரிக்கையாகும். இந்தியாவைப் பற்றிய அத்தனை தகவல்களும், நாட்டு நடப்புகள் இதில் இடம் பெற்றிருக்கும்.

டெல்லியில் நடந்த நகழ்ச்சியில் இந்த இணைய தள பத்திரிக்கை தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டின்போது ஓவர்சீஸ் இந்தியன் பத்திரிக்கையின் அச்சுப் பிரதியை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இணைய தள பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் வயலார் ரவி பேசுகையில், இந்தியாவில் நடைபெறும் அன்றாட நகழ்ச்சிகள் முதல் அனைத்து நிகழ்வுகளையும் இந்த இணைய தளம் வழங்கும். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

110 நாடுகளில் 2.5 கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இணையதளம் பல வகைகளில் உதவியாக இருக்கும்.

இந்தியாவின் அசைவுகளை அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.

இந்த இணைய தளம் மூலம் தகவல் பரிமாற்றம், உரையாடல், செய்திகள், யோசனைகள், தங்களது பிரச்சினைகளை பரிமாறிக் கொள்ள முடியும் என்றார் ரவி.

பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அச்சுப் பிரதி, இந்தி தவிர ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, குஜராத் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களை, வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை மறந்து விட்டதோ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+