பிரசாரத்துக்கு தயாராகும் மார்க். கம்யூனிஸ்ட்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கை:அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், மார்ச் 18ம் தேதி கோவையிலும், 19ம் தேதி சேலம், ஈரோடு, திருப்பூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
20ம் தேதி இரவு சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) உறுப்பினர் சீதாராம் எச்சூரி, 18ம் தேதி கன்னியாகுமரி, 19ம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மற்றொரு உறுப்பினர் பிருந்தா காரத் 18ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும், 19ம் தேதி திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்தக் கூட்டங்கள் அனைத்திலும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று வரதராஜன் கூறியுள்ளார்.
பிரச்சாரத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தயாராகிவிட்டாலும், இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் இன்னும் பரபரப்பு இல்லை. அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு இன்னும் அதிமுக கூட்டணி ஆசை தீரவில்லை.
அவரை தடுத்து திமுக கூட்டணியில் நீடிக்க வைக்க மூத்த தலைவரான நல்லகண்ணு கடுமையாக முயன்று வருகிறார்.












Click it and Unblock the Notifications