சங்கரராமன்: விஜயேந்திரர் மனு மீது விசாரணை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி விஜயேந்திரர்மற்றும் ரகு ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது புதுவை அமர்வுநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்து வருகிறது.

சங்கரராமன் கொலை வழக்கு புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதங்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி விஜயேந்திரர் மற்றும் அவரது தம்பிரகு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இருவரையும் வழக்கிலிருந்து விடுவிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடும்ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து மனு மீதான விசாரணை இன்றைக்குஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 பேரில்ஜெயேந்திரர், விஜயேந்திரர் தவிர மற்ற அனைவரும் ஆஜராகினர்.

இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் விஜயேந்திரர், ரகு மனுக்கள் மீதுவாதிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+