வருமான வரி:ஜெ-சசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
வருமான வரி தாக்கல் செய்யாத வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவும், உயிர்த் தோழி சசிகலாவும் சென்னைநீதிமன்றம் சொல்லும் தேதியில் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து இரண்டு மாதங்களில்முடிவெடுக்கும்படி சென்னை நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.1993-94ம் ஆண்டில் ஜெ-சசி இருவரும் வருமான வரி தாக்கல் செய்யாததை எதிர்த்து வருமான வரித்துறைவழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை நீதிமனறத்தில் நடந்து வருகிறது.
ஆனால், இந்த வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதையடுத்து இருவரையும்நேரில் ஆஜராக உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது.ஆனால், இந்தக் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மனு செய்தது. இந்த வழக்கு அங்கு விசாரிக்கப்பட்டுவருகிறது.
இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் அகர்வால், மாத்தூர் ஆகியோர்,
விசாரணை நீதிமன்றம் சொல்லும் தேதியில் ஜெயலலிதாவும் சசிகலாவும் நேரில் ஆஜாராக வேண்டும். இந்தவழக்கை வேகமாத நடத்தும் வகையில் தினந்தோறும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இவர்கள் மீதுகுற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து விசாரணை நீதிமன்றம் 2 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைநீதிமன்றம் விசாரித்து முடிக்கும் வரை இருவரும் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.
கடந்தமுறை இந் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவும் சசிகலாவும்நீதித்துறையையே கேலிக்குள்ளாக்குவதாக நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.
மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டிய முதல்வர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜாராகமல் இருப்பதுகடும் கண்டனத்துக்குரியது என்றனர்.
அப்போது பதில் மனு தாக்கல் செய்ய 6 வாரகால அவகாசத்தை ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டபோது,வரி செலுத்தாமல் ஏமாற்றிய இருவர் இதில் என்ன பதில் தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் கண்டித்ததுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications