காயப்படுத்தி விட்டது திமுக: வைகோ குமுறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக தலைவர்களை மட்டுமல்லாது, தொண்டர்களையும் பெரும் மனக்காயத்திற்குஆளாக்கி விட்டது திமுக. இதன் காரணமாகவே கூட்டணியிலிருந்து விலக வேண்டியமுடிவை எடுத்தேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

எழும்பூரில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில்செய்தியாளர்கள் குவியலுக்கு மத்தியில் பேசிய வைகோ

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

அவர் கூறுகையில்,

என்னையும், மதிமுக தலைவர்களையும், தொண்டர்களையும் மிகுந்த மனக்காயத்திற்குஉள்ளாக்கி விட்டது திமுக. தலைவர்கள காயப்படுத்தியதைக் கூட நான் பொறுத்துக்கொள்வேன். ஆனால் தொண்டர்கள் காயப்பட்டு நின்றபோது அதை பார்க்கக் கூடிய,தாங்கக் கூடிய சக்தி எனக்கு இல்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வர நேரிட்டது.

திமுகவின் அத்தனை தலைவர்களும் மதிமுகவினரை ஒரு பொருட்டாகவேமதிக்கவில்லை. சன் டிவியோ இன்னும் ஒரு படி மேலே போய், தொடர்ந்துமதிமுகவை புறக்கணித்து வந்தது. இதை நான் தாங்கினாலும் தொண்டர்கள் எப்படிப்பொறுத்துக் கொள்வார்கள்.?

எங்களை விளம்பரப்படுத்த டிவியில் காட்ட வேண்டாம். கட்சியின்செயல்பாடுகளையும், மக்களுக்காக நாங்கள் நடத்திய போராட்டங்களையும் கூடகாட்டவில்லை என்றால் அது எப்படி?

பொடா சட்டத்தைக் கொண்டு வந்தது வாஜ்பாய் அரசு. நான் பொடா சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதும் வாஜ்பாய் அரசுதான் மத்தியில்இருந்தது. அப்போது மதிமுகவைச் சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்களாகவும்இருந்தனர்.

எனவே பொடா சட்டத்தின் கீழ் நானும், மற்ற தோழர்களும் கைதாகி சிறையில்இருந்ததற்கு தமிழக அரசை மட்டும் குறை கூற முடியாது என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+