சட்டம், ஒழுங்கு சீர்கேடு-ஆளுனரிடம் காங் புகார்
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெட்டுவிட்டதாக ஆளுனர் எஸ்.எஸ்.பர்னாலாவிடம் தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் புகார் கொடுத்துள்ளார்.
ஆளுனர் பர்னாலாவை இன்று சந்தித்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன.சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் அரசியல் உள்ளிட்ட வேறு வேலைகளுக்கு ஏவி விடப்பட்டுள்ளனர் என்று கூறி புகார் மனுவைக் கொடுத்தார்.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குற்றவாளிகளைக் கைது செய்வதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டுகின்றனர் என்று கூறி இன்னொரு புகாரையும் அவர் கொடுத்தார்.
ஆளும் தரப்புக்கு எதிரான சில முக்கிய ஆவணங்களை கராத்தே தியாகராஜன் எஸ்.ஆர்.பியின் வீட்டில் வைத்துவிட்டுப் போனதாகக் கருதிய உளவுத்துறையினரே அவரது வீட்டின் பூட்டை உடைத்து சோதனையிட்டதாகவும், ஆனால், அதை கொள்ளை மாதிரி வெளியில் காட்டியதாகவும் செய்திகள் வெளியானது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications