ஆளுநருடன் இணக்கம்.. இதைத்தான் விரும்புகிறோம்.. ஓபனாக பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் 2வது நாளான இன்று, திமுக-தவெக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் வெடித்திருக்கிறது. குறிப்பாக தேசிய கீதம் விவகாரம் குறித்து பேசிய சபாநாயகர், ஆளுநருடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்றே எந்த மாநில அரசும் விரும்பும் என்று கூறியிருக்கிறார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடங்கிய நிலையில் திடீரென நேரலை நிறுத்தப்பட்டது. எனவே சட்டமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.

சட்டமன்ற கூட்டம்
தவெகவின் முதல் முழு சட்டமன்ற கூட்டம் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கியது. இந்தகூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டு பின்னர் இன்று 2வது நாளாக கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்திருந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது.
லைவ் நிறுத்தம்
இந்த விவாதம் தொடங்கிய உடனேயே பேரவையின் லைவ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த அமைச்சர் ராஜ்மோகன், கடந்த ஆட்சியில் பேரவை லைவ் ஒளிபரப்பப்படவில்லை என்றும், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்களின் போக்கை ஏற்க முடியாது என்றும், தவெக நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பும் என்றும் கூறியிருந்தார்.
அவர் பேசி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் லைவ் பேஜ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. இந்த பஞ்சாயத்து ஒருபுறம் எனில், மறுபுறம் ஆளுநருக்கு ஆதரவாக சபாநாயகர் பேசியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
என்ன பஞ்சாயத்து?
அதாவது நேற்று முதல் நாள் கூட்டத்தில், அவை நடவடிக்கைகள் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலிலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் முடியும்போது மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது. எதற்காக 2 முறை தேசிய கீதம் பாடப்பட வேண்டும்? என்று விமர்சனங்கள் எழுந்தன.
சபாநாயகர் பேசியது என்ன?
இது குறித்து திமுக எம்எல்ஏக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு ஆளுநருடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், ஒருமுறை 2 முறை பாடப்பட்டது என்று குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம் என்றும், ஆளுநருடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்றுதான் எந்த மாநில அரசும் விரும்பும் என்றும், தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன் எனவும் ஆளுநர் கூறியிருக்கிறார்.
ஆனால், இதை மறுத்த திமுக உறுப்பினர் எ.வ.வேலு, தேசிய கீதம் இறுதியில்தான் பாடப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் சட்டமன்றத்தில் காரசார விவாதம் வெடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications