தேர்தல் பணியில் ஈடுபட கே.ஜே. ராவ் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேர்தல் கமிஷனின் மிக பரபரப்பு அதிகாரியான கே.ஜே.ராவ், அந்தப் பணியில் இருந்து விலகிக் கொள்வதாகஅறிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஆளும் தரப்பினரின் அடாவடியைக் கட்டுப்படுத்த தேர்தல் கமிஷனால்சிறப்பு அதிகாரியாக அனுப்பப்பட்டவர் ராவ். அவரிடம் அதிமுகவினர் மட்டுமின்றி திமுக, பாமகவினரும் சிக்கிவதைபட்டனர்.

தவறு செய்த அதிகாரிகளும், காவல்துறையினரும் மாட்டிக் கொண்டு முழித்தனர். இதனால் கள்ள ஓட்டுக்கள்,முறைகேடுகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.

இதையடுத்து பிகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு அனுப்பப்பட்டார் ராவ். அங்கு எப்போதும் இல்லாத அளவுக்குமிக நியாயமான தேர்தலை நடத்திக் காட்டினார்.

இந் நிலையில் மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பணிகளையும்மேற்பார்வையிட இவரையே அனுப்ப இருந்தது தேர்தல் ஆணையம்.

ஆனால், அதை ஏற்க ராவ் மறுத்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் கமிஷனில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட ராவை தேர்தல் ஆணையம் காண்ட்ராக்ட் அடிப்படையில் பதவி நீட்டிப்பு தந்து வைத்துள்ளது.கடந்த மாதம் 28ம் தேதியோடு அவரது பணிக்காலம் முடிவடைந்தது.

இதையடுத்து அவரது காண்ட்ராக்டை நீட்டிக்க தேர்தல் ஆணையம் முன் வந்தது. ஆனால், அதை ஏற்க ராவ்மறுத்துவிட்டார். சொந்த காரணங்களால் இனியும் தன்னால் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது எனஅறிவித்துள்ளார்.

ராவ் மீது நாடாளுமன்றத்தில் லாலு, முலாயம் சிங்கின் கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துப் பேசியதுகுறிப்பிடத்தக்கது. அவர் பாஜகவுக்கு ஆதரவாக ஒருதலைப் பட்சமாக நடப்பதாகவும் அவரை பதவி நீக்கம்செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

அதே போல ராவ் போன்ற அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் சும்மா பரபரப்பை மட்டும் ஏற்படுத்தாமல்உண்மையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்ராமதாசும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களுக்கு உத்தரவு:

இதற்கிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேர்தல் பணிகளுக்கு அமைச்சர்கள் தங்களது அரசு கார்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால்கார்கள் பறிமுதல் செய்யப்படும். அதே போல யாரும் அரசு ஹெலிகாப்டரையும் தேர்தல் வேலைக்குபயன்படுத்தக் கூடாது.

தேர்தல் பணியில் மத்திய அரசு ஊழியர்களும், பாதுகாப்புப் பணியில் ராணுவப் படைகளும் பயன்படுத்தப்படும்.தேர்தலில் போட்டியிடுவோர் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

அதிமுகவுக்கு ஆதரவான 4 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு தரப்பட்டுள்ளதாக வந்துள்ள புகார் குறித்துவிசாரிப்போம்.

தேர்தலுக்கு ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் செலவிடலாம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+