மட்டக்களப்பில் 2 விடுதலை புலிகள் சுட்டு கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் இருவரை இலங்கைராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
மட்டக்களப்பில் ராணுவ உடையில் வந்த சிலர் தங்கள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் தங்களதுவீரர்கள் இருவர் பலியானதாகவும் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து தங்களது வீரர்கள் பதில்தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து ராணுவத்தினர் தங்களது முகாமுக்குள் ஓடிப் போய்விட்டதாகவும்புலிகள் கூறியுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பின் நடந்துள்ள முதல் தாக்குதல் இது.
ஆனால், இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. போர் நிறுத்தஒப்பந்தம் ஏற்பட்டதில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் எங்கள் படையினர் நுழைந்ததேஇல்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஆனால், கொல்லப்பட்ட ஒருவரின் உடலை தாங்கள் பார்த்ததாகவும், சில வீடுகள் தீக்கிரையானதாகவும்இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹாக்லாண்ட் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications