ஜெவை சந்தித்தார் வைகோ: அதிமுகவுடன் கூட்டணி மதிமுகவுக்கு 35 சீட்கள் ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vaiko with Jayalalitha

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள மதிமுகவுக்கு சட்டசபைத் தேர்தலில் 35தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து வைகோ இன்று விலகினார். இன்று காலை 11 மணிக்கு அவர் முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு நடத்தினார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில்நடந்த இச் சந்திப்பில் மதிமுகவுக்கு 35 தொகுதிகள் வழங்க அதிமுக ஒப்புக் கொண்டது.

இதையடுத்து இரு தலைவர்களும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மதிமுகவுக்கு 22 சீட் தான் அதிகபட்சமாகத் தர முடியும் என திமுக தலைவர் கருணாநிதி நேற்று திருச்சிமாநாட்டில் திட்டவட்டமாக அறிவித்ததையடுத்து கூட்டணியை விட்டு விலகும் முடிவுக்கு வைகோ வந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே மதிமுகவை கூட்டணியில் இழுக்க அதிமுக பல வகைகளிலும் முயன்று வந்தது. அப்போது45 சீட்களை வைகோ கோர் வந்தார். ஆனால், 30 இடங்களை மட்டுமே ஒதுக்க அதிமுக ஒப்புக் கொண்டது.

இதையடுத்து 40 சீட்கள் என்று இறங்கி வந்தார் வைகோ. நேற்று முழுவதும் இரு தரப்பினரும் தொடர்ந்துபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதில் 35 சீட்கள் என்று முடிவானது.

இதையடுத்து நேற்றிரவே ஜெயலலிதாவை வைகோ சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்துஏராளமான மதிமுகவினர் போயஸ் கார்டனில் குவிந்தனர். ஆனால், வைகோ வரவில்லை. இன்று தான் அந்தச்சந்திப்பு நடந்தது.

இன்று காலை 2 கார்களில் மதிமுகவினர் போயஸ் கார்டன் வந்தனர். முதல் காரில்வைகோகவும், கட்சியின் அவைத் தலைவரும் சசிகலாவின் உறவினருமானஎல்.கணேசனும் இருந்தனர். கணேசன்-நடராஜன் மூலமாகத் தான் இந்தக் கூட்டணியேஏற்பட்டுள்ளது.

2வது காரில் பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்,கலைப்புலி தாணு உள்ளிட்ட மதிமுக முன்னணியினர் இருந்தனர்.

ஜெயலலிதாவின் வீட்டு வாசலில் வைகோவை, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதையடுத்து வைகோவை வரவேற்றுப் பேசிய ஜெயலலிதாவுக்கு, தனது கட்சித் தலைவர்களை வைகோ அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் இரு தரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் முதல்வர் ஜெயலலிதாவுடன்அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது 35 தொகுதிகளை அதிமுக ஒதுக்க அதை வைகோ ஏற்றுக் கொண்டுஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும், வைகோவும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஜெயலலிதா கூறுகையில், மதிமுகவுடன் இணைந்து பொதுத் தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மதிமுகவுக்கு எங்கள் கூட்டணியில் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.

வைகோ பேசுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமரும் என்றார்.

இதையடுத்து வைகோ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்ததாக விஜய்காந்துக்கு வலை வீசி வருகிறது அதிமுக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+