வைகோவின் சந்தர்ப்பவாதம்- தலைவர்கள் தாக்கு
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி சேருவது என்று வைகோ எடுத்த முடிவால் பெரும் அதிர்ச்சிஅடைந்திருப்பதாக காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைகோ விலகல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில்,இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஒருதுரதிர்ஷ்டவசமான முடிவு. பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்வைகோ.அவரோடு பலரும் அடைக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் எல்லாம் இப்போதுஎன்ன நினைப்பார்கள் என்பதை வைகோ யோசித்துப் பார்க்க வேண்டும்.
மக்கள் கூட்டணி, மக்கள் கூட்டணி என்று கூறி வந்தார் ஜெயலலிதா. இப்போதுமக்களை நம்புவதை அவர் விட்டுவிட்டார் என்று தெரிகிறது. இதனால் தான்மற்றவர்களையெல்லாம் தேடிச் சென்று வலை வீசிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்என்றார் கிருஷ்ணசாமி.
நல்லகண்ணு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு கூறுகையில்,கடந்த ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சிக்குப் படிப்பினை தரும் வகையில்அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வந்த வேளையில்அதிர்ச்சியூட்டும் விதமாக வைகோ இந்த முடிவை எடுத்துள்ளார்.
திடீரென அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது தமிழக மக்களுக்கு பெரும்ஏமாற்றம் தந்துள்ளது. இந்த முடிவுக்கும், வைகோவுக்கும் சற்றும் பொருத்தமில்லை.அவருக்கு முரண்பாடான முடிவு இது. இதை நாங்கள் மட்டுமல்ல மக்களும் கூடஎதிர்பார்க்கவில்லை என்றார்.
வரதராஜன்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வரதராஜன் கூறுகையில், திமுகதலைமையிலான அணியில்தான் தொடருவோம் என கடந்த வாரம்தான் வைகோஅறிவித்தார். ஆனால் இப்போது திடீரென அதிமுகவுடன் உடன்பாடு செய்திருப்பது,இதை சுத்தமான அரசியல் சந்தர்ப்பவாதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.
அதே போல பாமக தலைவர் ஜி.கே.மணியும் வைகோ அணி மாறியதை கண்டித்துள்ளார்.












Click it and Unblock the Notifications