அதிமுக-திமுக கூட்டணிக்கு அழைத்தன: விஜய்காந்த்
மதுரை:
வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் நடிகர்விஜய்காந்த் கூறியுள்ளார்.
தனது தேமுதிக கட்சியின் வேட்பாளர் நேர்காணலில் ஈடுபட்டுள்ள விஜய்காந்த் மதுரை வந்தார். பின்னர்நிருபர்களிடம் பேசுகையில்,திருச்சி, கரூர், தேனி மாவட்டங்களுக்கான 21 தொகுதிகளுக்கு இதுவரை 300 பேரிடம் நேர்காணல் நடத்திமுடித்துள்ளேன்.
வரும் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். 234 தொகுதிகளிலும் தனித்தேபோட்டியிடுவோம். கூட்டணிக்கு வருமாறு அதிமுகவும் திமுகவும் அழைத்தன. நான் மறுத்துவிட்டேன் என்றார்.
வைகோ அதிமுக கூட்டணிக்கு சென்றுவிட்டாரே என்று கேட்டதற்கு, அவர் வைகோ, நான் விஜய்காந்த். அவர்போனது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
மேலும், அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகளை நாங்கள் எதிரிகளாகக் கருதவில்லை என்றார்.
வைகோ வருவதற்கு முன் விஜய்காந்தை கூட்டணிக்குள் இழுக்க சசிகலா மூலம் விஜய்காந்த் மனைவியுடன்அதிமுக பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது விஜய்காந்தை விரட்டுவதை அதிமுக நிறுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு மீது விஜயகாந்த் திடீர் பாய்ச்சல்:
இந் நிலையில் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு குழப்பம், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தமிழக அரசின் நிர்வாகசீர்கேடு மற்றும் அதிகாரிகளின் குழப்பங்களே காரணம் என்று விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொறியியல் கல்லூரி நடத்தி வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாணவர் சமுதாயம் இப்போது மாபெரும் குழப்ப நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடே காரணம்.
அரசாங்கம் சரியான முறையில் திட்டமிட்டு, மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீர்வு கூறியிருந்தால், பல இன்னல்களை சந்திக்கும்அபாயத்திலிருந்து மாணவர்கள் தப்பித்திருக்கலாம்.
பிளஸ்டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு அவசியமில்லை என்று அரசாங்கம் ரத்து செய்து அறிவித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை.எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்தியபோது, கிராமப்புற மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைத்தது. இதனால் தொழிற்கல்வி என்றகனவு ஏழை மாணவர்களுக்கு நனவானது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திட்டத்தினால் கிராமப்புற ஏழை மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் பலனடைந்து, திறமைஅடிபப்டையில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது. இடையில் இத்திட்டம் வியாபாரமாக்கப்பட்டு விட்டது.
நுழைவுத் தேர்வுக்கு தனியாக பயிற்சி வகுப்பு என்ற போர்வையில் மாணவர்களிடம் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.இதனால்தான் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
நுழைவுத் தேர்வால் அவர்கள் பாதிக்கப்படவில்லை, அந்தப் பெயரை வைத்து சிலர் நடத்திய பண வேட்டையால்தான் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அடுத்து, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதனால் எந்த பல்கலைக்கழகத்தில் சேர வேண்டுமோ,அதற்கென தனித்தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கெல்லாம் அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு, முறையாக செயல்படாததே காரணம். இதற்குப் பதிலாக தமிழகம் முழுமைக்கும் ஒரே நுழைவுத்தேர்வை நடத்தி அந்த நுழைவுத் தேர்வையே அனைத்து தொழிற் கல்வி படிப்புகளுக்கும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.
மாணவர்களின் எதிர்காலத்தை பாழடித்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், நுழைவுத் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்றகேள்விக்குக் கூட கடைசி வரை முடிவு தெரியாமல் மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்க்ளையும் குழப்பும் இதுபோன்ற அரசாங்கத்தால்யாருக்கு நன்மை?.
இதேபோல, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக பணத்தை வசூல் செய்து, சீட்டுக்களைஅதிகப்படுத்தி வருகின்றனர்.
சரியான அங்கீகாரம் வாங்காமல் அவர்கள் வைத்ததே சட்டம் என்பது போல செயல்படுகின்றனர். இதனால் வேலை கிடைக்காமலும், கிடைத்தவேலை நிலைக்காமலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதற்கும் அரசின் நிர்வாக குளறுபடியே காரணம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications