இ.கம்யூ வரப்டாது: தவமாய் தவமிருக்கும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

வெளியில் சும்மா பேச்சுக்கு தனித்துப் போட்டி என்று பேட்டி கொடுத்தாலும் தனித்து நின்றால் அறந்தாங்கி தவிரவேறு எங்கும் டெபாசிட் கிடைக்காது என்ற நிலையே பாஜகவில் உள்ளது. திருநாவுக்கரசரை வைத்துஅறந்தாங்கியில் மட்டுமே அக் கட்சியால் கரையேற முடியும்.

இந் நிலையில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு தேசிய அளவில் சில வேலைகள் ஆரம்பித்துள்ளன. தமிழக தேர்தல்பொறுப்பாளராக பிரதாப் சிங் ரூடியை பாஜக நியமித்துள்ளது.

பாஜக ஆட்சியில் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது ஜெயா டிவிக்கு எதிராக திமுக நகர்த்திய காய்களைகட்டுப்படுத்த உதவியர் என்பதால் போயஸ் கார்டனில் அவருக்கு நல்ல பெயர் உண்டு.

அதை வைத்து அதிமுக கூட்டணிக்குள் நுழைய முயன்று வருகிறது பாஜக. இது தொடர்பாக தமிழகதலைவர்களிடையே வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தியபோது, கூட்டணி தான் ஒரே வழி எனதிருநாவுக்கரசர் உள்பட அனைவருமே கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரூடி மூலமாக அதிமுகவை பாஜக தொடர்பு கொண்டுள்ளது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட்கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர முயன்று வருகிறோம். நீங்கள் வந்தால் அவர்கள் இருக்க மாட்டார்கள்.இதனால் அந்தக் கட்சியின் நிலை தெளிவான பிறகு உங்களிடம் பேசுகிறோம். பொறுமை காக்கவும் என்று தகவல்தரப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் உளவுப்பிரிவில் உள்ள ஒரு முக்கிய அதிகாரியின் சொந்தக்காரர். இதனால் அவரை வளைக்க தீவிர முயற்சி நடக்கிறது.ஆனால், நல்லகண்ணு தான் இதற்குத் தடையாக இருந்து வருகிறார்.

வழக்கமாக இடதுசாரிகள் ஜாதி, மத வித்தியாசம் பார்ப்பதில்லை என்றாலும், அதிமுக தரப்பில் இருந்துமுக்குலத்தோர் வலையை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் மீது வீசி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடக் கூடாது என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு காத்திருக்கிறது பாஜக.

அதே நேரத்தில் பாஜகவுக்கு அதிமுக தரப்பில் இருந்து ஒரு உத்தரவு போயிருக்கிறதாம். கூட்டணி என்று பேசிக்கொண்டு இல.கணேசன், ராஜா, சுகுமாறன் நம்பியார் போன்றவர்கள் போயஸ் கார்டனுக்குள் கால் வைக்கக்கூடாது என்று எச்சரிக்கை கலந்த குரலில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

ஜெயேந்திரர் கைதுக்குப் பின் கணேசனும், ராஜாவும் அதிமுகவை மிகக் கடுமையாகத் தாக்கி வருவது தெரிந்ததே.ஆனால், வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாறனுக்கு போயஸ் தோட்டத்தில் நல்ல பெயர் தான் இருந்துவந்தது.

என்ன ஆச்சோ தெரியவில்லை. அவருக்கும் தடா போட்டுள்ளார்களாம். மக்கள் ஆதரவோ தொண்டர் ஆதரவோசுத்தமாக இல்லாத சுகுமாறன் நம்பியாருக்கு கட்சியில் பாஜகவில் ஏக மதிப்பு உண்டு என்பது தான் தெரியுமே.

இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை என்று வந்தால் ரூடி, நாயுடு, தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன்ஆகியோர் மட்டுமே அதிமுகவால் எண்டர்டெயின் செய்யப்படுவர் என்று தெரிகிறது.

முதலில் விஜய்காந்தின் கட்சியில் ஏறி சவாரி செய்ய பாஜக நினைத்தது. ஆனால், அவர் தனித்துப் போட்டி என்றுசொல்லிவிட்டார் (ஆனால் விஜய்காந்துக்கும் அதிமுக தொடர்ந்து வலை வீசிக் கொண்டு தான் உள்ளது, 35 சீட்தந்தால் கூட்டணியில் ஐக்கியமாக அவரும் ரெடி தான் என்று தெரிகிறது)

அன்று கருணாநதி, இன்று வைகோ:

இதற்கிடையே பாஜக கூட்டத்தில் பேசிய ராதாகிருஷ்ணன்,

பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்கிறார் கருணாநிதி. நாங்கள் யார் என்பதை வரும் தேர்தலில் காட்டுவோம்.சிவப்பு (கம்யூனிஸ்டுகள்) எங்கே இருக்கிறதோ அங்கே வறுமையும், தரித்திரமும் தான் இருக்கும். (அப்ப காவிஇருந்தா?)

அன்று வாஜ்பாய் முதுகில் கருணாநிதி குத்தினார். இன்று கருணாநிதி முதுகில் வைகோ குத்தியுள்ளார். ஆறு ஆண்டு கால பாஜக ஆட்சி இந்தியாவை தலைநிமிரச் செய்தது. யார் எல்லாம் வாஜ்பாய் முதுகில் குத்தினார்களோ அவர்களெல்லாம் வருகிற தேர்தலில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி.

கூட்டணிக்காக யாரிடமும் மண்டியிட மாட்டோம். தனித்துப் போட்டியிட தயாராகவே இருக்கிறோம் என்றார் (நெசமாங்களா?)

ஜெ. அமைத்த 6 பேர் குழு:

இதற்கிடையே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த ஓ.பி. தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதாஅமைத்துள்ளார்.

அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், கொள்கைப் பரப்புச் செயலாளர்ஓ.எஸ்.மணியம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் குழு இணைச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் கூட்டணிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்து அக் கட்சியினருடன் பேசி தொகுதிப் பகிர்வு உடன்பாடு காண்பர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+