எங்க சத்துக்கு ஏற்ப சீட் கேட்போம்-திண்டீஸ்
சென்னை:
எங்களது பலத்துக்கேற்ப அதிமுகவிடம் சீட் கேட்போம் என்று தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர்திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
திமுகவிடம் 120 தொகுதிகளை வாங்க வேண்டும், கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும் என்று அதிமுகவின்குரலை காங்கிரசுக்குள் கொடுத்து கலகம் செய்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி.அதிமுகவின் முழு ஆதரவுடன் காங்கிரசில் குழப்பம் செய்து கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இப்போதுஅதிமுக பின்னணியில் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர்செய்தியாளர்களிடம் திண்டிவனம பேசுகையில், திராவிடக் கட்சிகளுக்கு இணையாக இடங்கள் ஒதுக்க வேண்டும்என்பு கோரினேன். அப்போது நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன்.
இப்போது நான் காங்கிரஸ் கட்சியில் இல்லை. தனியாக கட்சி ஆரம்பித்துள்ளேன். எனவே எனது வலிமைஎன்னவோ அதற்கேற்ப அதிமுகவிடம் சீட் கேட்பேன். (அப்ப 120 தொகுதி?, நாங்கள் தான் உண்மையானகாங்கிரஸ் என்று இதே வாயால் சொன்னது?)
அடுத்த தேர்தலில் வலிமையை அதிகரித்து விடுவோம். விடுதலைச் சிறுத்தைகளுக்கும், எங்களுக்கும் வலிமையில்வித்தியாசம் உள்ளது. எனவே எங்களது வலிமைக்கேற்பதான் சீட் கேட்போம். (மீசையில் நோ மண்)
வைகோ விடுதலைப் புலிகளின் அனுதாபி என்பது குறித்து கவலைப்படவில்லை. (ஜெமினி சர்க்கஸில் சேர்ந்துபல்டி அடிப்பவர்களுக்கு பயிற்சியாளராக இவரை சேர்த்துக் கொள்ளலாம். வைகோவுடன் கூட்டணிவைத்துள்ளதற்காக சோனியாவை போன மாசம் வரை விமர்சித்தவர் இவர்). அவர் ராஜீவ் காந்திகொலையாளிகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை.
எனவே அதிமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றிருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை (இருந்தாலும்அதை ஜெயலலிதாவிடம் போய் சொல்லத்தான் முடியுமா?) என்றார் திண்டிவனம் ராமமர்த்தி.
பாவம் திண்டிவனம்... எம்புட்டு கஷ்டம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications