அதிமுக ஆட்சியை தூக்கி எறியுங்கள்: சோனியா
திருச்சி:
ஐந்தாண்டு கால மக்கள் விரோத அதிமுக ஆட்சியை வருகிற சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
திருச்சி திமுக மாநில மாநாட்டில் சோனியா நிறைவுரையாற்றினார். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு மாறாக, முதலில் கருணாநதி பேசினார். இதைத் தொடர்ந்து சோனியா நிறைவுரையாற்றினார்.சோனியா காந்தியின் ஆங்கிலப் பேச்சை முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், தமிழில் மொழி பெயர்த்தார்.
சோனியாவின் பேச்சில், மத்திய கூட்டணி அரசின் சாதனைகளே அதிகம் இடம் பெற்றிருந்தது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாட்டையும் சோனியா காந்தி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
சோனியாவின் பேச்சு:
சுனாமி நிவாரணம், மழை, வெள்ள நிவாரணப் பணிகள் என தமிழகம் தத்தளித்தபோதெல்லாம் மத்திய அரசு மிகவும் தாராளமாக உதவி செய்தது.
தமிழக மக்களின் ஆதரவால்தான் மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் அமர முடிந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் அனுபவம் வாய்ந்த அறிவுரைகள், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மன்மோகன் சிங் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 200 மாவட்டங்களில், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாவட்டங்களும் அடங்கும். இந்தத் திட்டம் மத்திய அரசின் சாதனைத் திட்டமாகும்.
தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ் கொண்ட தமிழுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியிருக்கிறோம். இதற்கு கருணாநிதியின் பங்கு முக்கியமானதாகும். தமிழக மக்களின் நீண்ட கால கனவான சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சுனாமி பேரலைகள் தமிழகத்தைத் தாக்கியபோது, ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டியது மத்திய அரசு. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்வது, நான்கு வழிப் பாதைகளை அமைப்பது என எண்ணற்ற சாதனைகளை செய்து வருகிறோம்.
இந்த சாதனைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1 ரூபாயில் எஸ்.டி.டி. பேசும் வசதியும், உங்களது தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அதிமுக ஆட்சியை பதவியிலிருந்து அகற்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒளிமயமான வாழ்க்கையையும், வளமான வாழ்க்கையையும் உருவாக்குவோம்.
அதிமுக அரசின் கோரப் பிடியில் இருந்து தமிழகத்தைக் காப்போம். இந்த ஆட்சியை தூக்கி எறிவோம்.
கருணாநிதி கூறியதைப் போல, கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருந்து உழைத்தால் அந்த மகத்தான வெற்றி சாத்தியமாகி விடும் என்றார் சோனியா காந்தி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications