மத்திய கூட்டணியில் வைகோ நீடிப்பார்: காங்.
டெல்லி:
திமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள வைகோ, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிப்பதில் எந்தத்தவறும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள வைகோ மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடரப்போவதாகவும், மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு தனது ஆதரவு தொடரும் எனவும்அறிவித்துள்ளார்.இதற்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய கூட்டணியில் வைகோவை தொடர விட மாட்டோம்என்று அவர் கோபமாக கூறியுள்ளார். இருப்பினும் இதுதொடர்பாக திமுக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதுஎன்பதை அவர் விவரிக்கவில்லை.
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் காங்கிரசுடன் இந்த விஷயத்தில் மோதுவதை கருணாநிதி தவிர்க்க விரும்புகிறார்.தேர்தலுக்குப் பின் மத்தியக் கூட்டணியில் இருந்து வைகோவை வெளியேற்றும் வேலைகளில் கருணாநிதிஈடுபடுவார் என்று தெரிகிறது.
இந் நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக்சிங்வி,
ராம்விலாஸ் பாஸ்வானின் பாணியை வைகோ கடைப்பிடிக்கிறார். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.பீகாரில் பாஸ்வானும், லாலு பிரசாத் யாதவும் நேர் மாறாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் இருவருமேமத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர், மத்திய அமைச்சர்களாகவும் உள்ளனர்.
மாநில அரசியல் சூழ்நிலைகள், கூட்டணிகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சம்பந்தம் இல்லாதவை. இதுதேசிய அளவிலான கூட்டணி. கூட்டணி தர்மப்படி மதிமுக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடர முடியும்.அரசியலில் இது சாதாரண விஷயம்தான்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக தொடர டியாது, அதை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்தாகும் என்றார் சிங்வி.
இதன்மூலம் கருணாநிதியை கடுப்பேற்றியுள்ளது காங்கிரஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications