வைகோ: கருணாநிதியுடன் பேச காங். முடிவு
டெல்லி:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக நீடிப்பது குறித்து திமுகதலைவர் கருணாநிதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவுசெய்யப்படும் என காங்கிரஸ் கட்சி திடீரென அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து கழன்று கொண்ட மதிமுக, மத்திய ஐக்கிய முற்போக்குக்கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என அறிவித்துள்ளது.ஆனால் திமுக தலைவர் கருணாநிதி, திருச்சியில் அளித்த பேட்டியில், மதிமுக, மத்தியகூட்டணியில் நீடிக்க முடியாது. அதை நாங்கள் அனுமதிக்கவும் முடியாது என்றுதிட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
ஆனால், கூட்டணயில் வைகோ நீடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றுநாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியும், காங்கிரஸ்செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்கிவியும் கூறியிருந்தனர்.
லாலு பிரசாத், பாஸ்வான் பாணியில், மதிமுகவும், திமுகவும் காங்கிரஸ் கூட்டணியில்நீடிக்கலாம் என்றனர்.
இவர்களது கருத்துக்கு காங்கிரஸ் தலைமையிடம் திமுக கடும் எதிர்ப்புத்தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மதிமுக தொடர்பாக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் பேசிமுடிவு செய்யப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களிடம்கூறுகையில், (இவர்தான் வைகோ நீடிப்பதில் தவறில்லை என்று கூறியவர்), ஐக்கியமுற்போக்குக் கூட்டணியின் அனைத்து முடிவுகளும் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசியே எடுக்கப்படுகின்றன.
வைகோ குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்யப்படும்.மதிமுகவுக்கும் தனது தரப்பு கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
அதேசமயம், கருணாநிதியின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்சிங்வி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications