வைகோ: மக்கள் சகிக்க மாட்டார்கள்-ஈவிகேஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வைகோ அணி மாறியதை மக்கள் நிச்சயம் சகிக்க மாட்டார்கள் என மத்திய இணையமைச்சர் இளங்கோவன்கூறினார்.

அவரது பேட்டி:

திமுக கூட்டணியை விட்டு வெளியேற வைகோ எப்போதோ முடிவெடுத்துவிட்டார். அதிமுக கூட்டணியில்சேரும் தனது நெடுநாளைய எண்ணத்தை இப்போது செயல்படுத்தியுள்ளார்.

ஸ்டாலின் பிரச்சனையைக் காட்டி திமுகவில் இருந்து வெளிறிேயவர் மீண்டும் திமுக அணிக்கு வந்தார். இப்போதுதொகுதிப் பங்கீட்டைக் காரணம் காட்டி வெளியே போகிறார். அவரது செயல்களை மக்கள் கவனித்துவருகிறார்கள். அவர் அணி மாறியதை மக்கள் நிச்சயம் சகிக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா வேண்டுமானால் பழையதை எல்லாம் மறக்கலாம். ஆனால், அவரால் மக்கள் பட்ட கஷ்டம்கொஞ்சமா, நஞ்சமா?. அதையெல்லாம மக்கள் மறக்கவே மாட்டார்கள்.

காங்கிரசுக்கு உரிய இடங்களை திமுக தர வேண்டும். இடப் பங்கீடு நியாயமாக இருக்க வேண்டும். தமிழகத்தில்கூட்டணி ஆட்சி என்ற என் கருத்தை நான் மாற்றிக் கொள்ளவில்லை. அது நடக்கும்போது நடக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+