வைகோ சென்னையில் போட்டி?
சென்னை:
சென்னையில் நிலவி வரும் திமுகவின் ஆதிக்கத்தை தகர்க்கும் வகையில் கூட்டணிக்கட்சித் தலைவர்களை சென்னை நகர தொகுதிகளில் போட்டியிட வைக்க ஜெயலலிதாதிட்டம் வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணிக்கு நிகராக அதிமுக கூட்டணியும் படிப்படியாக பலமடைந்துவருகிறது. வைகோ மற்றும் திருமாவளவன் என இரு பெரும் சக்திகளை தன் பக்கம்ஈர்த்துள்ள ஜெயலலிதா, அவர்களை வைத்து திமுகவுக்கு சில அதிர்ச்சிவைத்தியங்களை அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.அதன்படி வைகோ மற்றும் திருமாவளவனை சென்னை நகர தொகுதிகளில்போட்டியிடுமாறு அவர் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டுள்ளதாகத்தெரிகிறது.
அதன்படி சென்னை அண்ணா நகரில் வைகோவும், எழும்பூர் தொகுதியில்திருமாவளவனும் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கைவைத்துள்ளாராம்.
வைகோவின் சென்னை வீடு அண்ணா நகர் பகுதியில்தான் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
அண்ணா நகர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. திமுக பொருளாளர் ஆற்காடுவீராசாமி. நாணயற்ற அரசியல்வாதி என வைகோவை கடுமையாக விமர்சித்துஅறிக்கை வெளியிட்டவர் ஆற்காடு என்பதால், அவரைப் பழி தீர்க்க அண்ணா நகரில்வைகோ போட்டியிட வேண்டும் என்று கோரியுள்ளாராம் ஜெயலலிதா.
அதேபோல எழும்பூர் தொகுதியில் தற்போது திமுகவின் பரிதி இளம்வழுதிஎம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் பெரும் ரவுடித்தனம் செய்து கள்ள ஓட்டுப் போட்டும் கூட 86 வாக்குகள்வித்தியாசத்தில் வென்றவர் பரிதி.
திமுகவின் இளம் தலைவர்களில் மிக முக்கியமானவர். ஸ்டாலினின் போர்ப்படைத்தளபதிகளில் ஒருவர். சட்டசபையில் கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் பரிதியை வீழ்த்த திருமாவளவனால் மட்டுமே முடியும்என கணக்குப் போட்டுள்ளார் ஜெயலலிதா.
இதேபோல ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினின் ஆதிக்கத்தைமுவுக்குக்கொண்டு வரும் திட்டத்துடன் முன்னாள் அமைச்சரும், ஆயிரம் விளக்கு தொகுதியின்நிரந்தர செல்லப் பிள்ளையாக பல காலம் கோலோச்சியவருமானகே.ஏ.கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே. முகிலனை அதிமுக சார்பில் நிறுத்தஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
நடிகர் ராதாரவியும், சென்னை நகரின் முக்கியத் தொகுதி ஒன்றில் நிறுத்தப்படுகிறார்.இதுதவிர பெரம்பூர் தொகுதியில் மதிமுகவின் தென் சென்னை மாவட்ட செயலாளர்வேளச்சேரி மணிமாறன் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
பண பலம் படைத்த மணிமாறன் கடுமையாக உழைக்கக் கூடியவர் என்பதால் நிச்சயம்அவரை வெற்றி பெற வைக்க முடியும் என ஜெயலலிதா கருதுகிறார்.
பார்ப்போம்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications