காசியில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உ.பி.மாநிலம் வாரணாசியில் (காசி) அடுத்தடுத்து நடந்த 2 குண்டுவெடிப்புகளில் 20பேர் பலியாயினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே உள்ள மிகப்பழமையான சங்கட்மோச்சன் கோவில் (அனுமன் கோவில்) உள்ளது.

இங்கு நேற்று மாலை பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது.

மாலை நேர பூஜைக்காக பக்தர்கள் அதிக அளவில் அந்தக் கோவிலில் கூடியிருந்தனர்.கிட்டத்தட்ட 4,000 பேர் வரை கூடியிருந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒருகிலோமீட்டர் தூரத்திற்கு வெடிகுண்டு வெடித்த சப்தம் கேட்டது.

முதல் குண்டு வெடித்த சில நமிடங்களில் வாரணாசி ரயில் நிலையத்திலும்சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அப்போது ரயில் நிலையத்தில் டெல்லி செல்லும்ஷிவ்கங்கா எக்ஸ்பிரஸ் முதலாவது பிளாட்பாரத்தில் புறப்படுவதற்காக காத்திருந்தது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் 20 பேர் உயிரிழந்தனர். 50க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இச்சம்பவங்களுக்குப் பொறுப்பேற்கவில்லைஎன்றாலும் காஷ்மீரின் லஷ்கர்-ஏ-தொய்பா மீது சந்தேகம் விழுந்துள்ளது.

சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் லக்னெளவில் போலீசார் நடத்தியதேடுதல் வேட்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

குண்டுவெடிப்பு நடந்த அனுமன் கோவிலை, கடந்த 1900ம் ஆண்டு பண்டிட் மதன்மோஹன் மாளவியா கட்டினார். வாரணாசியில் உள்ள மிகப் பிரபலமானகோவில்களில் இந்த அனுமன் கோவிலும் ஒன்று.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே வெடிக்காத நிலையில் கிடந்த நான்கு குண்டுகளைபோலீஸார் பறிமுதல் செய்தனர். இவையும் வெடித்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம்ஏற்பட்டிருக்கும்.

கலாம், சிங் கண்டனம்:

வாரணாசி குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள்அமைதி காத்து, ஒற்றுமையுடன் இருந்து சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று இருதலைவர்களும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உ.பி. முதல்வர் முலாயம் சிங்யாதவ், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரும் தீவிரவாதிகளின்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சோனியாவும், சிவராஜ் பாட்டீலும், நேற்றிரவே வாரணாசிக்கு சென்று சம்பவஇடத்தைப் பார்வையிட்டனர்.

காங். மீது பாஜக தாக்குதல்:

தீவிரவாதிகளை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறி விட்டதையே இந்த சம்பவம்எடுத்துக் காட்டுகிறது என பாஜ குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இச்சம்பவம் நடைபெற காங்கிரஸ் அரசின்மெத்தனப் போக்கே காரணம். தீவிரவாதிகளிடம் காங்கிரஸ் அரசு மென்மையானஅணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது.

இந்துக்களும், முஸ்லீம்களும் மிகுந்த பொறுமையுடன், அமைதியுடன் இருந்துதீவிரவாதிகளின் நோக்கத்தை, சதியை முறியடிக்க வேண்டும் என்றார்.

வாரணாசி சம்பவத்தைக் கண்டித்து உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று முழுஅடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+