கேப்டனை கலக்கிய பஜ்ஜி-உடல்நலம் பாதிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட பிரசாரத்தின்போது கடையில் சாப்பிட்ட பஜ்ஜி ஒத்துக்கொள்ளாததால், உடல் நலம் பாதிக்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்த், தனது பிரசாரத்தை ரத்து செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த். 2வதுநாளாக காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஸ்பிக் நகர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால் இந்த ஊர்களில் பொதுக் கூட்ட மேடை அருகே மக்கள் கூடத் தொடங்கினர்.கூட்டம் கூடியும், விஜயகாந்த்தைக் காணோம். கிட்டத்தட்ட பகல் 1 மணி வரை மக்கள்மிகப் பொறுமையுடன் காத்திருந்தனர்.
ஆனாலும் விஜயகாந்த் வராமல் போகவே கோபமடைந்த பொதுமக்கள் கலைந்துபோகத் தொடங்கினர்.
இந் நிலையில் விஜயகாந்த்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகசெய்தியாளர்களுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அனைவரும் விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தனர்.அங்குஅறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த விஜயகாந்த்தை சந்தித்தனர்.
அவர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், நல்ல வெயில் அடித்துக் கொண்டுள்ளது.இருந்தாலும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஒரு கிராமத்தில் உள்ளகடையில் பஜ்ஜி நன்றாக இருக்கும் என்று கூறியதால், வாங்கி சாப்பிட்டேன்.
அது வயிற்றைக் கெடுத்து விட்டது. காலையிலிருந்தே வயிறு சரியில்லை, உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளது.
டாக்டரின் அறிவுரைப்படி உணவு சாப்பிட்டேன். மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.மாலைக்குள் சரியாகி விடும் என நம்புகிறேன் என்றார் விஜயகாந்த்.
மிகவும் சோர்வாக காணப்பட்ட விஜயகாந்த் தொடர்ந்து பேசுகையில், கூட்டணிதொடர்பாக அதிமுகவிலிருந்து யாரும் என்னை அணுகவில்லை.பத்திரிக்கைகளில்தான் இதுதொடர்பாக செய்திகள் வருகின்றன. நாங்கள் யாருடையகூட்டணியையும் எதிர்பார்க்கவில்லை.
நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரைக்கும் சிந்திக்கவேஇல்லை. தமிழகம் முழுவதும் சுற்றிப் பிரசாரம் செய்யும் எண்ணத்தில்தான் நான்தற்போதைக்கு உள்ளேன். எனவே எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்றஎண்ணத்திற்கு இதுவரை வரவில்லை.
எனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் பிரசாரத்திற்கு வருவார்களா என்பதுஎனக்குத் தெரியாது. நான் யாரையும் பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என்றார்விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications