ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்..!
சென்னை:
தமிழக அரசு வழங்கியுள்ள இலவச வேட்டி, சேலைகளை பாத்திர வியாபாரிகளுக்குப்போட்டு புதிய பாத்திரம் வாங்குவதில் சென்னை நகர மக்கள் படு மும்முரமாகஉள்ளனர்.
வீட்டில் உள்ள பழைய துணிகளை, நடமாடும் பாத்திர வியாபாரிகளிடம் போட்டுஅதற்குப் பதிலாக புதிய பாத்திரங்களை வாங்கும் பழக்கம், தொன்றுதொட்டு இருந்துவருகிறது.பழைய துணிகளுக்கு ஒரு விலை போட்டு அதற்கு ஈடான பிளாஸ்டிக், எவர்சில்வர்பாத்திரம் வாங்குவார்கள். இதற்கு பெரும்பாலும் வீட்டில் பயன்படுத்தப்படாமல்உள்ள, பழைய, கிழியாத துணிகளைத்தான் போடுவார்கள்.
ஆனால் சென்னையில் புதிய துணிகளைப் போட்டு பாத்திரங்களை வாங்குகிறார்கள்பெண்கள்.
அவர்கள் போடும் புதிய துணிகள் எது தெரியுமோ? தமிழக அரசு இலவசமாகவழங்கிய வேட்டி, சேலைகள்தான்.
சென்னை நகர மக்கள் இந்த வேட்டி, சேலையை விற்பதற்கு இரண்டு காரணங்கள்.தேர்தலை மனதில் வைத்து மிகக் குறுகிய காலத்திற்குள் இரண்டு முறை அவர்களுக்குஇந்த இலவச வேட்டி, சேலை கிடைத்துள்ளது.
முதலில் வெள்ள நிவாரண நிதியுடன் சேர்த்து வாங்கினர். பின்னர் பொங்கலுக்காகவாங்கினர்.
இந்த வேட்டியும், சேலையும் குவாலிட்டி மிகக் குறைவு. மேலும் அதில் தமிழ்நாடுஅரசு முத்திரை வேறு இருப்பதால் அதை வெளியில் கட்டிக் கொண்டு போகமுடியவில்லை.
சும்மா வீட்டில் வைத்திருப்பதற்கு பதில் பாத்திர வியாபாரியிடம் போட்டால் ஏதாவதுபாத்திரமாவது வாங்கலாமே என்று பண்டமாற்று முறையை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தத் துணிகளுக்கு பாத்திர வியாபாரிகளிடம் நல்ல டிமாண்ட் இருப்பதால் சென்னைநகரின் பல பகுதிகளிலும் இலவச வேட்டி, சேலைகளை பாத்திர வியாபாரிகளுக்குபோடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சேலைக்கு 30 ரூபாயும், வேட்டிக்கு 10 ரூபாயும் பாத்திர வியாபாரிகள் ரேட்நிர்ணயித்துள்ளனர்.
இந்த சேலைகளை வாங்கும் பாத்திர வியாபாரிகள், பின்னர் அந்த வேட்டி,சேலைகளை கொண்டு போய் நன்கு துவைத்து அதில் உள்ள தமிழக அரசின்சின்னத்தை அழித்து விடுகின்றனர். பின்னர் அவற்றை கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று காசு பார்க்கின்றனர்.
ஆனால் இவற்றை வாங்குவதற்கு அவர்கள் விதிக்கும் ஒரே நிபந்தனை, வேட்டியும்,சேலையும் கிழியாமல் புத்தம் புதிதாக இருக்க வேண்டும் (இல்லாவிட்டால்திரும்பவும் விற்க முடியாதே!)
ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications