தேர்தல்: ஜெயலலிதாவுக்காக புது ஹெலிகாப்டர்
சென்னை:
தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சார்பில் புதியஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா இன்று சென்னை நகரை சுற்றிவந்தார்.
தமிழக அரசின் சார்பில் இந்த நேரத்தில் புதிய ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளது.தேர்தலை மனதில் வைத்து, பிரச்சாரத்துக்கு வசதியாகவே இது வாங்கப்பட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.இந்த ஹெலிகாப்டரின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா,தலைமைச் செயலாளர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஹெலிகாப்டரில்பயணித்தனர்.
தலைமைச் செயலகம் எதிரே உள்ள ஹெலிபேடிலிருந்து கிளம்பி சென்னை மாநகரைசுற்றி வந்து ஹெலிகாப்டரில் வெள்ளோட்டம் பார்த்தார் ஜெயலலிதா.
தொகுதிகள்: நாளை அறிவிப்பு?
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்ற விவரம் வெள்ளிக்கிழமைஅறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கூட்டணியில் மதிமுக (35 தொகுதிகள்), விடுதலைச் சிறுத்தைகள் (9), இந்தியதேசிய லீக் (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1), மூவேந்தர் முன்னேற்றக் கழகம்(1) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், அக்கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள்குறித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தேர்தல் பணிக்குழு பேச்சுவார்த்தைநடத்தி வந்தது.
பேச்சுவார்த்தை தற்போது முடிவடைந்துள்ளது. இவர்கள் தவிர திண்டிவனம்ராமமூர்த்தியின் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ், செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக்கட்சி, விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக, வை.பாலசுந்தரத்தின் அம்பேத்கர் மக்கள்இயக்கம் ஆகியவையும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில்இணைந்துள்ளன.
இவர்களுக்கு ஆளுக்கு ஒன்று இரண்டு சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந் நிலையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும்,அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இன்று இரவு அல்லதுநாளைக்குள் அதிமுக அறிவிக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக வன்னியர் முன்னேற்றக் கழகம்என்ற குட்டியூண்டு கட்சி இன்று அறிவித்துள்ளது.
தங்களுக்கு 15 தொகுதிகளில் பலம் இருப்பதாகவும், அந்த அளவுக்குத்தொகுதிகளை ஒதுக்குமாறும் அதிமுகவை இக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications