பாமகவுக்கு 31 சீட்?: திமுக இழுபறி
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 31 சீட் கொடுக்க திமுக முன் வந்துள்ளது. அதற்குராமதாஸும் சம்மதம் தெரிவித்து விட்டார் எனத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் பாமகவுக்கான தொகுதிப் பங்கீடு புதன்கிழமை மாலை இறுதியாகிஇரு கட்சித் தலைவர்களும் கையெழுத்து போடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.இதைத் தொடர்ந்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களும்,புகைப்படக்காரர்களும் குவிந்தனர்.ஆனால் பாமக தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.இந்த நலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக, மகிழ்ச்சியாக நடந்துவருகிறது. பாமக போட்டியிடும் தொகுதிகள் ஏறக்குறைய முடிவு செய்யும் நிலையைஅடைந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை (இன்று) மாலையில் அல்லதுவெள்ளிக்கிழமை காலையில் வெளியாகும்.
தொகுதிப் பங்கீடு விஷயத்தில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே பிரச்சனைஏற்பட்டுவிட்டதாக வழக்கம் போல, உளவுத் துறையினர் பரப்பும் வதந்திகளைபாமகவினர் யாரும் நம்ப வேண்டாம்.
உளவுத் துறையினர் பொய்யான வதந்திகளைப் பரப்பும் கோயபல்ஸ் வேலையில்இறங்கி விட்டதாக தகவல் எட்டியுள்ளது. அந்த வதந்திகளை கட்சியினர் புறக்கணிக்கவேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
ராமதாஸ் இவ்வாறு கூறினாலும், செவ்வாய்க்கிழமை கருணாநிதியும், ராமதாஸும்சந்தித்தபோதே, தொகுதிப் பங்கீடு முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி 35 தொகுதிகிள் கேட்டு வந்த பாமகவுக்கு, 30 சீட்கள் தருவதாகக்கருணாநிதி கூற, பாமக தொடர்ந்து இழுபறி செய்ய, கடைசியில் 1 சீட் கூடுதலாகத்தருவதாகக் கூறி அனுப்பினார் கருணாநிதி.
இதையடுத்து திரும்பிப் போன ராமதாஸ், 31 தொகுதிகளுக்கு ஓகே சொல்லிதுரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மூலம் கருணாநிதிக்கு தகவல் அனுப்பினார்.
என்னென்ன தொகுதிகள் என்பதையும் கருணாநிதியும் ராமதாசும் நேரில்சந்தித்தபோதே ஓரளவுக்கு பேசி முடித்து விட்டாலும் ஒரு சில தொகுதிகள் மட்டுமேஇழுபறியாக உள்ளது.
அத்தொகுதிகள் குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்பேசிய பிறகு முடிவு செய்யலாம் என திமுக கூறியுள்ளது.
இதனால் இன்று முதலில் காங்கிரஸ் பின்னர் மார்க்சிஸ்டுகளுடன் திமுக உடன்பாடுகண்டது. அடுத்ததாக பாமகவுடன் உடன்பாடு ஏற்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications