வைகோவின் பொடா தோழர்கள் 3 பேருக்கு சீட்
சென்னை:
தன்னுடன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம்அனுபவித்தவர்களில் 3 பேருக்கு மட்டும் சட்டசபைத் தேர்தலில் சீட் கொடுக்கவைகோ முடிவு செய்துள்ளார்.
அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது.போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்காக அதிமுக மற்றும் மதிமுககுழுவினர் பேசி வருகிறார்கள்.இந் நிலையில், மதிமுகவுக்கான வேட்பாளர்கள் குறித்த தேர்தவில் வைகோமும்முரமாக உள்ளார்.
இளைய தலைறையினருக்கு அதிக க்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், கட்சிக்காகஅரும்பாடு பட்டு உழைத்தவர்களுக்கும் வேட்பாளர் தேர்வில் முன்னுரிமைதரவுள்ளார் வைகோ.
234 தொகுதிகளிலும் வைகோ தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரம்மேற்கொள்ளவும், குறிப்பாக மதிமுக போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாகஉழைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைக்கூட வைகோ தவிர்க்கக் கூடும் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில், சீட்கொடுக்க வைகோ முடிவு செய்துள்ளார். அதன்படியே வேட்பாளர் தேர்வை அவர்நடத்தி வருகிறார்.
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி தன்னுடன் ஒரு ஆண்டுக்கு மேலாக சிறைவாசம்அனுபவித்தவர்களில் 3 பேருக்கு மட்டும் சட்டசபைத் தேர்தலில் சீட் கொடுக்கப்போகிறார் வைகோ.
புலவர் செவந்தியப்பன், ஈரோடு கணேசமூர்த்தி, வீர இளவரசன் ஆகியோர்தான் அந்தமூவர்.
மற்றவர்களுக்கு ராஜ்யசபா தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் வாய்ப்பளிக்கஅவர் திட்டமிட்டுள்ளார். வைகோவையும் சேர்த்து மொத்தம் 9 பேர் பொடாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், தனது மகன் அண்ணாவுக்கு தஞ்சைமாவட்டம் ஓரத்தநாடு தொகுதியை கேட்டுள்ளார். இருப்பினும் சீட் கிடைக்கும் என்பதுஉறுதியில்லை என மதிமுகவினரே சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
வேட்பாளர் தேர்வுக்கு முன்னதாக வருகிற 13ம் தேதி கட்சியின் பொதுக் குழுவைக்கூட்டுகிறார் வைகோ. அக்கூட்டத்தில், தேர்தல் உத்திகள், பிரசார உத்திகள், நிதி குறித்துகட்சியினருடன் விரிவாக விவாதிக்கவுள்ளார்.
சட்டசபைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மதிமுகவுக்கு முதல் மறையாக மிகப்பிரகாசமாக உள்ளதால், முடிந்தவரை 35 தொகுதிகளிலும் வெற்றி பெற வைகோ மிகத்தீவிரமாக உள்ளார்.
அதற்கேற்ப அவரது பிரசாரமும் அனல் பறக்கும் வயிைல் அமையும் எனமதிமுகவினர் எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம் அதிமுகவும் பெரும்பாலானதொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள்அனைத்திலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவும் வைகோ திட்டமிட்டுள்ளதாக மதிமுகதரப்பில் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications