எங்கள யாருமே கூப்பிடல: பாஜக
சென்னை:
கூட்டணிக்காக எங்களை இதுவரை யாரும் அணுகவில்லை என பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,காசியில் முஸ்லீம் தீவிரவாதிகள் மீண்டும் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.அதை விட்டுவிட்டு வேர்களைக் கண்டறிய வேண்டும் என்ற கவிதையில் அயோத்தி சம்பவத்தையும்புகுத்தியிருக்கிறார் கருணாநிதி. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளோம். சில அமைப்புகளோடு கூட்டணி ஏற்படவும் பேச்சுவார்த்தைநடக்கிறது. இதற்காக லட்சுமனன், ராதாகிருஷ்ணன், வைத்தியலிங்கம், திருநாவுக்கரசர் ஆகியோரைக் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது.
14ம் தேதி முதல் போட்டியிட விரும்புவோரிடம் மனுக்கள் வாங்கப்படும். 20ம் தேதிக்குள் வேட்பாளர்பட்டியலும் தயாராகிவிடும். 20ம் தேதி எங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.
தேர்தல் பணிகளுக்காக சுகுமாறன் தலைமையில் நிதிக்குழுவும், திருநாவுக்கரசர் தலைமையில் தேர்தல் குழுவும்அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்காக எங்களை இதுவரை யாரும் அணுகவில்லை என்றார்.
பாஜக எம்எல்ஏ அதிமுகவுக்கு ஜம்ப்
இந் நிலையில் பாண்டிச்சேரியின் ஒரே பாஜக எம்.எல்.ஏ.வான கிருஷ்ணமூர்த்தி,அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார்பாளையம் தொகுதி உறுப்பினராவார். வரும் தேர்தலில்பாஜக இங்கு மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகஇருப்பதால், கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்துள்ளார்.
மீண்டும் ரெட்டியார்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடகிருஷ்ணமூர்த்தி முடிவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்த கிருஷ்ணமூர்த்திசென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அப்போது புதுவை மாநில அதிமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான அன்பழகன்உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், கட்சியில் எனக்குமரியாதை இல்லை. மழை, வெள்ளத்தின்போது எனது தொகுதி மக்களுக்கு எந்தவிதஉதவியையும் என்னால் செய்ய முடியவில்லை.
காரணம், அரசு என் தொகுதியை புறக்கணித்து விட்டது. ஆனால் பெரிய மாநிலமானதமிழகத்தில் அம்மா அவர்கள் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் ஒருவர் விடாமல்நிவாரணத் தொகையையும், உதவிகளையும் வழங்கியுள்ளார்.
அதிமுகவில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதால்தான்(தனது பதவிக் காலம் முடியப் போகும் போது திடீரென இந்த விவரம் இவருக்குத்தெரிய வந்திருக்கிறது) பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தேன் என்றார்கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தி விலகல் குறித்து புதுவை பாஜக தலைவர் கேசவலு கூறுகையில்,மீண்டும் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் அதிமுகவில் போய்சேர்ந்துள்ளார். மற்றபடி மக்கள் நலம், தொகுதி நலம் என்பதெல்லாம் வெறும் கதைஎன்றார்.












Click it and Unblock the Notifications