அதிமுகவில் சீட் கேட்கும் சிங்கி, சிங்கா
சென்னை:
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு நரிக்குறவர்கள் அதிமுக தலைமைக் கழகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் யாரும் எதிர்பாராத பலரும் அலை அலையாக வந்து சேர்ந்துகொண்டுள்ளனர். முதலில் விடுதலைச் சிறுத்தைகள் வந்தது, பின்னர் மதிமுக வந்தது.இ.கம்யூனிஸ்ட் தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளது.மேலும் பு.தா.இளங்கேவான் உள்ளிட்டோரின் பல லெட்டர் பேட் கட்திகளும்அதிமுகவைத் தேடி வந்து கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன.
அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு தாராள மனப்பான்மையுடன் சீட் ஒதுக்கிவருகிறது.
இந் நிலையில், ஊசி மணி, பாசி மணி, டால்டா டின் சகிதம் 20க்கும் நரிக்குறவர்கள்அதிமுக தலைமைக் கழகத்திற்கு திடீரென வந்தனர்.
ஓ சாமியோவ் என்ற கோஷத்துடன் வந்த அவர்களைப் பார்த்ததும் அதிமுகவினர்திகைத்தனர்.
இவங்க எதுக்குப்பா இங்கே வந்திருக்காங்க என்ற ஆச்சரியம் அவர்களிடையேதெரிந்தது. உள்ளே வந்த அவர்கள், அலுவலக வளாகத்தில் நிழலாக பார்த்துஅமர்ந்தனர். பின்னர் அவர்கள் கையில் மனுவோடு அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
சாமி,நாங்க தேர்தலில் அதிமக சார்பில் போட்டியிட விரும்புகிறோம். அதுக்காக மனுகொடுக்கணும் என்று அவர்கள் கூற, இன்ப அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகள்,அவரை நேராக கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியனிடம் கூட்டிச்சென்றனர்.
மணியனை சந்தித்த நரிக்குறவர்கள் அவரிடம் மனு கொடுத்தனர். மணியனிடம்அனைத்திந்திய வாகிரியார் (நரிக்குறவர்) முன்னேற்றக் கழக தலைவர் வெங்கடேசன்கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.
நரிக்குறவப் பெண் ஒருவர் மணியனுக்கு, பாசி மணி மாலையை அணிவிக்க, கூடஇருந்த பிற நரிக்குறவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் வெங்கடேசன் கூறுகையில், சாமியோவ், நாங்க நரிக்குறவர் இனத்தைச்சேர்ந்தவங்க. 21 வருடமாக அதிமுகவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். கட்சியின்கிளைச் செயலாளர் பதவியையும் வகிக்கிறேன். 2001ம் ஆண்டு இந்த அமைப்பைஆரம்பித்தேன்.
அப்போதே அதிமுகவுக்கு தீவிர ஆதரவு தெரிவித்தோம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீவிர ரசிகர்கள் நாங்கள். இருவரும் இணைந்து நடித்தஒளிவிளக்கு படத்தை நான் மட்டும் 175 தடவை பார்த்துள்ளேன்.
எங்களுக்கு எம்.ஜி.ஆர். தான் சாமி தெய்வம். மொத்தமாக தமிழகம் முழுவதும் 5.50லட்சம் நரிக்குறவர்கள் இருக்கிறோம்.அத்தனை பேரும் அதிமுகவுக்குத்தான் ஒட்டுபோடுவோம்.
அரக்கோணம், பள்ளிப்பட்டு, சோளிங்கர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியதொகுதிகளில் ஒன்றை எங்களுக்கு கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெற்று அம்மாவுக்குவிசுவாசமாக இருப்போம் என்றார் வெங்கடேசன்.
டமுக்கடிப்பான் டியாலோ, டமுக்கடிப்பான் டியாலோ












Click it and Unblock the Notifications