For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக: ஆட்சியமைக்க 91.5% வெற்றி தேவை!!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் மீண்டும் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 129தொகுதிகளில் போட்டியிடும் திமுக 118 இடங்களில் ஜெயித்தாக வேண்டியகட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு105 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளார். கூட்டணி சிதறிப் போய் விடக் கூடாதேஎன்பதற்காக, அவரே அடிக்கடி சொல்வதைப் போல பெரிய அளவில் தியாகம்செய்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளை சரிக்கட்டும் வகையிலேயே இத்தனை தொகுதிகளை திமுகவிட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. இப்போது மிகப் பெரிய ஆசிட் சோதனைக்குதிமுக தயாராக வேண்டியுள்ளது.

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தனிப் பெரும்பான்மைபலம் பெற வேண்டும் என்றால் 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்த தொகுதிகள் போக மீதமுள்ள 129 தொகுதிகளில்திமுக போட்டியிடுகிறது. முஸ்லீம் லீக் கட்சிக்கு கொடுத்துள்ள 3 தொகுதிகளிலும்அக்கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறார்கள்.

அதையும் சேர்த்தால் 132 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள்களத்தில் நிற்கிறார்கள்.

இதிலிருந்து 118 தொகுதிகளை திமுக வென்றாக வேண்டும். முஸ்லீம் லீக் கட்சியினர்உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் கூட (சட்டப்படி அவர்கள் திமுகஉறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என்றாலும் கூட) அவர்கள் முஸ்லீம் லீக்கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு உட்பட்டே செயல்படுவார்கள்.

எனவே அவர்களை திமுக தங்களது கணக்கில் சேர்க்க முடியாது.

இதனால் போட்டியிடும் 129 தொகுதிகளிலிருந்து 118 தொகுதிகளை திமுக வென்றாகவேண்டும். அதாவது 91.5 சதவீத வெற்றியை திமுக பெற்றாக வேண்டும். அப்படிஜெயித்தால் மட்டுமே தனித்து ஆட்சி அமைக்க முடியும்.

இல்லாவிட்டால் கூட்டணி ஆட்சியைத்தான் திமுக அமைக்க முடியும்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி வந்ததில்லை. இந் நிலையில்திமுக எடுத்திருக்கும் இந்த சூதாட்டம் போன்ற துணிச்சலான நடவடிக்கை, அரசியல்வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பான செய்திகள்பு, 1971ம் ஆண்டு திமுக 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1996ம் ஆண்டு 183 தொகுதிகளில் போட்டியிட்டு172 இடங்களில் வெற்றி பெற்றது.

அதிமுகவுக்கு எதிரான மிகப் பெரிய அதிருப்தி அலையால் இந்த அசாத்திய வெற்றிசாத்தியமானது.

கடந்த 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக 141 தொகுதிகளில் போட்டியிட்டு130 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. எனவே இந்த முறை கருணாநிதிகுறைந்த அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பது அவரதுஅசாத்திய நம்பிக்கையையே காட்டுகிறது.

இது குறித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில்,

அதிமுக நிச்சயம் தோல்வி அடையும், மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றஅபார நம்பிக்கையில் கருணாநிதி உள்ளார். இதற்கு கூட்டணிக் கட்சிகளின் ஓட்டும்மிக மிக முக்கியம். இதனால்தான் இவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க வேண்டியநிலைக்கு கருணாநிதி தள்ளப்பட்டார் என்றார்.

கிட்டத்தட்ட கயிறு மேல் நடப்பது போன்ற நிலையில் திமுக உள்ளது. 118க்குகுறைவாக ஒருவேளை திமுக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டால், கூட்டணி ஆட்சிஅமைக்க திமுக முன்வருமா அல்லது, வெளி ஆதரவுடன் தனித்து ஆட்சி அமைக்குமாஎன்பதுதான் இப்போதைய முக்கியக் கேள்வியாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.

இந் நிலையில் அதிமுக பிரமுகரிடம் நாம் பேசியபோது,

திமுகவுக்கு நாங்கள் சிரமமே கொடுக்கப் போவதில்லை. காரணம், 234தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் அபார வெற்றி பெறும். எனவே 118தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமே, கூட்டணி ஆட்சியை தவிர்க்க வேண்டுமேஎன கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை என்றார்.

வைகோ தைரியத்துல பேசுறீங்களா என்று கேட்டால், அதுவும் ஒரு காரணம் தான்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X