தப்பிய கோவை-பெங்களூர் விமானம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கோவையிலிருந்து பெங்களூர் சென்ற ஏர் டெக்கான் விமானம் தரையிறங்கியபோது,ரன்வேயை விட்டு விலகி ஓடி விபத்தில் சிக்கியது. இருப்பினும் விமானியின்சாதுரியத்தால் 44 பயணிகள் உயிர் தப்பினர்.
கோவையிலிருந்து இன்று காலை ஏர் டெக்கான் நிறுவன விமானம் பெங்களூர்புறப்பட்டுச் சென்றது. அதில் 44 பயணிகள் இருந்தனர். விமானம் பெங்களூரைஅடைந்ததும் தரையிறங்க முயற்சித்தது.ஆனால் விமானத்தின் சக்கரங்கள் வெளியே வராமல் சிக்கிக் கொண்டன.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக ரன்வேயின் அருகேவந்த பின்னர் சக்கரங்கள் வெளியில் வந்தன. ஆனால், தரையிறங்கிய அந்த விமானம்ரன்வேயைவிட்டு விலகி ஓடியது. விமானி மிகவும் சாதுரியமாக செயல்பட்டுவிமானத்தை நிறுத்தினார்.
பயணிகள் மற்றும் பணியாளர்களும் பத்திரமாக தரையிறங்கினர். இந்த விபத்தால்பெங்களூர் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம்பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications