14ம் தேதி திமுகவில் இணைகிறார் கண்ணப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சி வரும் 14ம் தேதிதிமுகவில் இணைகிறது.

கோனார் சமூகத்தினரின் வாக்குகளை குறி வைத்து கடந்த சட்டசபைத் தேர்தலுக்குமுன்பு ஆரம்பிக்கப்பட்ட கட்சி மக்கள் தமிழ் தேசம். கடந்த தேர்தலில் திமுகவுடன்கூட்டணி வைத்துப் போட்டியிட்டது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கிடைத்த பாடத்தைக் கருத்தில் கொண்டு, ஜாதிக்கட்சிகளுக்கு இம்முறை இடம் கிடையாது என்ற முடிவை கருணாநிதி எடுத்துள்ளார்.இதன் அடிப்படையில் மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு இந்த முறை தனியாக சீட் தரமுடியாது என்று கருணாநிதி கூறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து கட்சியை திமுகவுடன் இணைத்து விட கண்ணப்பன்முடிவெடுத்துள்ளார். இதை எதிர்த்து ஒரு பிரிவினர் ஏற்கனவே மறுமலர்ச்சி மக்கள்தமிழ் தேசம் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி விட்டனர்.

இந் நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கண்ணப்பன் பேசுகையில்,அதிமுக ஆட்சியை அகற்ற வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் கரத்தைவலுப்படுத்த வேண்டியது அவசியம். திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைக்கவேண்டிய ஓட்டுக்கள் சிதறி விடக் கூடாது.

இதைக் கருத்தில் கொண்டே திமுகவுடன் இணைய முடிவெடுத்துள்ளோம். வருகிற14ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில் திமுக, மக்கள் தமிழ்தேசம் கட்சியின் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் திமுக தலைவர் கருணாநிதி உள்பட முக்கிய திமுக தலைவர்கள் அனைவரும்கலந்து கொள்கின்றனர் என்றார் கண்ணப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+