ஏமாற்ற நினைத்ததால் ஏமாற்றினோம்: நாஞ்சில்
திருப்பூர்:
நாங்கள் அழிந்து போக வேண்டும் என்று நினைத்தீர்கள். எங்களை ஏமாற்ற நினைத்ததால் நாங்கள் உங்களைஏமாற்றினோம் என மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
திருப்பூரில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய சம்பத்,திமுகவை விட மதிமுகவின் கட்டமைப்பு மிகச் சிறந்தது. நீ (கருணாநிதி) மாநாடு நடத்தினால் எங்களுக்கும்மாநாடு நடத்த திறமை உண்டு.
திருச்சி மாநாட்டில் நிருபர்களிடம் மதிமுகவுக்கு 22 தொகுதிகள் தான் என்று அறிவிக்கிறாய். கூட்டணியில்தொடர்வது வைகோவின் விருப்பம் என்கிறாய். இதே வார்த்தையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்துகூற முடியுமா?
வைகோவை ஆலோசிக்காமல் தொகுதியை அறிவிக்க உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
நாங்கள் அழிந்து போக வேண்டும் என்று நினைத்தீர்கள். எங்களை ஏமாற்ற நினைத்ததால் நாங்கள் உங்களைஏமாற்றினோம். மதிமுக தொடங்கி 12 வருடத்தில் இப்போது தான் வைகோ, தான் ஒரு ராஜதந்திரி என்பதைநிரூபித்திருக்கிறார்.
அதிமுக கூட்டணி பாலும் தேனும் கலந்தது. திமுக கூட்டணி நஞ்சு கலந்தது. கலைஞரே.. திமுகவின் சகாப்தம்இத்தோடு முடியப் போகிறது. இது உங்களுக்கு கடைசி தேர்தல். தேர்தலுக்குப் பின் திமுக இருக்காது. கலைஞரின்கட்டுப்பாட்டில் அவரது காலும் இல்லை, கட்சியும் இல்லை.
நாங்கள் ராஜ தந்திரியாக காயை நகர்த்தினோம். இங்கும் பேசினோம்.. அங்கும் பேசினோம். எங்களைப் படைத்தகடவுளே எங்களைப் பார்த்து திகைத்துவிட்டார்.
அதிமுக மீது மக்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. நெல்சன் மண்டேலா ஜெயியில் இருந்து வந்தபோது என்னசொன்னாரோ அதையே தான் என் தலைவன் வைகோவும் கூறினான். ஜெயலலிதாவுடன் சேர்ந்து நல்லாட்சிஅமைப்போம் என்றான்.
மிசாவில் பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டது. பொடா அப்படி அல்ல. எல்லா இடத்திலும் பேசினோம். மிசாவைமறந்து நேருவின் மகளே வருக என்று சொல்லி இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைக்கவில்லையா கருணாநிதி.
உங்களுக்கு ஒரு மகள் கிடைத்தாள். எங்களுக்கு பொன் மகள் (ஜெயலலிதா) கிடைத்துள்ளார்.
திமுக இப்போது ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. கூட்டணியில் இருந்தபோது அவர்களைஆதரித்துப் பேசினேன். ஒருவன் கூட நன்றி தெரிவிக்கவில்லை. அதிமுகவில் கூட்டணியில் எத்தனையோ பேர்எனக்கு நன்றி சொல்கிறார்கள்.
திமுகவில் நாங்கள் அவசியமில்லாத 6வது விரலாக அவமதிக்கப்பட்டோம். அதிமுகவில் கட்டை விரலாகமதிக்கப்படுகிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும். வாருங்கள்.. உங்களுக்காகஅம்மாவிடம் நானே பேசுகிறேன்.
எங்களுக்கு 35 சீட் தந்தது மட்டுமல்ல. பிரதான எதிர்க் கட்சியாகவும் மதிமுக மாற வேண்டும் என்றார்.தேர்தலுக்குப் பின் 7வது கட்சியாகத் தான் திமுக இருக்கும்.
திமுக கூட்டணி தலைவர்கள் உருவாக்கியது. அதிமுக கூட்டணி தொண்டர்கள் உருவாக்கியது. இதனால்எங்களுக்கு 234லிலும் வெற்றி தான் கிடைக்கும் என்றார் நாஞ்சில் சம்பத்.
மதிமுக பொதுக்குழு:
இந் நிலையில் மதிமுகவின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் இன்று நடந்தது.
சட்டசபைத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகள், பிரசார வியூகம், நிதி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இக் கூட்டம்கூட்டப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் எல்.கணேசன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளார் கண்ணப்பன் மற்றும் கட்சி முன்னணியினர்,பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications