நெல்லை, தூத்துக்குடியில் பேய் மழை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய பேய் மழைகொட்டித் தீர்த்ததால் இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான சாலைகள் பெயர்ந்துபோய் விட்டன.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்ததிடீர் மழையால் கடும் வெப்பம் தணிந்துள்ள போதிலும், மக்களின் இயல்புவாழ்க்கையில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில்,நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேய் மழை பெய்துமக்களை பயமுறுத்தியுள்ளது. இரு மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாகவேவிட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.

இந் நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை முற்பகல் வரை பேய்மழை வெளுத்து வாங்கியது. நிற்காமல் பெய்த இந்த மழையால் இருமாவட்டங்களும் ஸ்தம்பித்துப் போயின.

நெல்லை மாவட்டத்தில் கயத்தாறு, மணியாச்சி, நெல்லை நகர், அம்பாசமுத்திரம்,கடையநல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழை நிற்காமல் பெய்தது.இதனால் வயல்கள் நீரில் மூழ்கி விட்டன. பல சாலைகள் பெயர்ந்து போய் விட்டன.

இதேபோல தூத்துக்குடியிலும், விடாமல் பெய்த மழையால் மாவட்டம் ஸ்தம்பித்தது.உமரிக்கோட்டை-தளவாய்புரம் இடையே உள்ள தாமோதி ஆற்றுப் பாலம் கனமழைக்கு துண்டிக்கப்பட்டு விட்டது.

ராமசாமிபுரம், ஸ்பிக் நகர், மகிழம்புரம், தளவாய்புரம் ஆகிய கிராமங்களில் ஆற்று நீர்சூழ்ந்துள்ளது.

செக்காரக்குடி என்ற ஊருக்குச் செல்லும் பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட ஐந்து கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுமழை நீர் சூழ்ந்துள்ளது.

மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+