கட்-அவுட், பேனர்களை அகற்ற கெடு முடிந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொது இடங்களில் அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகள் வைத்துள்ளகட்-அவுட்கள், பேனர்களை அகற்ற இன்றுடன் கெடு முடிவடைந்தது. இதை மீறியுள்ளஅரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சட்டசபைத் தேர்தலையொட்டி பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல்ஆணையம் அமல்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியாக, பொது இடங்களில் அனுமதிபெறாமல், அரசியல் கட்சிகள் கட் அவுட்கள், பேனர்கள் வைக்கக் கூடாது என்றுதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அப்படி வைத்திருக்கும் கட்சிகள் தங்களது கட்சியின் பேனர்கள், கட் அவுட்களைஅகற்றிக் கொள்ள இன்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நலையில் இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாசெய்தியாளர்களிடம் கூறுகையில், அனுமதி இல்லாமல், பொது இடங்களில்வைக்கப்பட்டுள்ள கட்சிகளின் கட் அவுட்கள், பேனர்களை அகற்றுவதற்கான காலஅவகாசம் முடிந்து விட்டது.

ஆனால் அதையும் மீறி சில இடங்களில் பேனர்கள், கட் அவுட்கள் இருப்பதாகத்தெரிய வந்துள்ளது. அந்த அரசியல் கட்சிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைஎடுப்பது என்பது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும்.

தேர்தலை சுமூகமாகவும், நியாயமாகவும் நடத்துவது தொடர்பாக விரைவில்சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றார் குப்தா.

இதற்கிடையே, தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இன்று மாலை சென்னை வருகிறார்.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நாளை அவர் சென்னையில் உயர் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்துகிறார்.

இந் நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரிகொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் 5 லட்சம் போலியானவை என்றுகண்டறியப்பட்டதால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+