பார்வர்ட் பிளாக் மாநாட்டில் பயங்கர வன்முறை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலியில் நடந்த பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில மாநாட்டில், கார்த்திக்ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால், மாநாடு பாதியிலேயே முடிந்தது. ரசிகர்களைபோலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில மாநாடு திருநெல்வேலியில்நடந்தது. இந்த மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், மேற்குவங்க அமைச்சர் நரேந்திர நாத், மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்டதலைவர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அதிமுகவின் ஜால்ராவான சந்தானம்எம்எல்ஏ அழைக்கப்படவில்லை.

மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

நெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் மாநாடு நடந்தது.

மாநாட்டிற்கு அதிக அளவில் பார்வர்ட் பிளாக் விசுவாசிகளும், கார்த்திக் ரசிகர்களும்திரண்டிருந்ததால், மைதானம் நிரம்பி வழிந்தது.

தொண்டர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்ததால் முக்கியப் பிரமுகர்களுக்காகப்போடப்பட்டிருந்த இருக்கைகளையும் தொண்டர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இந் நிலையில் பிஸ்வாஸ், அகில இந்தியத் தலைவர் வேலப்பன் நாயர், நரேந்திர நாத்உள்ளிட்ட தலைவர்கள் மேடைக்கு வந்தனர். இரவு 7 மணியளவில் கார்த்திக்மேடைக்கு வந்தார்.

கார்த்திக்கை பார்த்ததும் கூட்டத்தில் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. கூட்டத்தினர்கட்டுப்பாட்டை மீறி மேடையை நோக்கி திரண்டு வந்தனர்.

இதையடுத்து மைக்கைப் பிடித்த கார்த்திக்கின் சரணாலயம் அமைப்பின் தலைவர்பாலு,

ஏற்கனவே ராஜபாளையம், மதுரை ஆகிய ஊர்களில் நடந்த கூட்டங்களின்போதுரகளையில் ஈடுபட்டதால் தலைவர் கார்த்திக் பேச முடியாமல் போனது. இப்போதும்அப்படி நடந்து விடக் கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றார்.

ஆனால் இதன் பிறகு கூட்டத்தில் ரகளை அதிகமானது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், மண்ணை வாரி வீசிக் கொண்டும் கலாட்டா செய்தனர்.

இதையடுத்து கார்த்திக் மைக்கைப் பிடித்து, நீங்கள் அமைதியாக இருந்தால்தான்எல்லோரும் பேச முடியும் என்றார். இதையடுத்து சற்றே அமைதி நிலவியது.தொடர்ந்து சில நிமிடங்கள் கார்த்திக் பேசினார். இதைத் தொடர்ந்து பிஸ்வாஸ்பேசினார்.

அவரைத் தொடர்ந்து மீண்டும் கார்த்திக் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிஸ்வாஸ் பேச்சை முடிக்கும் முன்பே தொண்டர்களிடையே பெரும் ரகளைஏற்பட்டது. சிலர் இருக்கைகளை உடைத்து கூட்டத்தில் தூக்கி எறிந்தனர். இதனால்பெரும் மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் தாறுமாறாக அடித்துக் கொண்டனர். அந்த இடமே போர்க்களம்போல மாறியது. இதனால் அதிருப்தி அடைந்த தலைவர்கள் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர்.

கார்த்திக்கும் புறப்பட்டுச் சென்றார். தலைவர்கள் கிளம்பியதால் தொண்டர்கள் மேலும்ஆத்திரமடைந்தனர். இதனால் மேடையை நோக்கி கற்களை வீசியும்,இருக்கைகளையும் தூக்கி வீசி பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீஸார் கூட்டத்தின் மீது தடியடி நடத்தினர். அவர்களை ஓட ஓடவிரட்டி அடித்துக் வன்முறைக் கூட்டத்தைக் கலைத்தனர்.

கலைந்து சென்ற தொண்டர்கள் அலை அலையாக நெல்லை நகர தெருக்களில் புகுந்துசென்றனர். போகும் வழியெல்லாம் கற்களை வீசியும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் ரவுடித்தனம் செய்தனர்.

இதனால் நெல்லை நகரமே பதட்டத்தில் மூழ்கியது. மாநாடு நடைபெறும்பகுதியிலிருந்து முக்கிய பகுதிகள் அனைத்திலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது.

தொண்டர்கள் கொஞ்சம் கூட கட்டுப்படாமல், ஒவ்வொரு முறையும் பெரும்ரகளையில் ஈடுபட்டு வருவது கார்த்திக்குக்கு பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.

இது எதேச்சையாக நடந்த செயலா அல்லது திட்டமிட்டு யாரேனும் (சந்தானம் தரப்புஅல்லது அதிமுக) இப்படி கலாட்டா செய்து கட்சியின் இமேஜை குலைக்கமுயற்சிக்கிறார்களா என்று பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்களிடையே பெரும்குழப்பம் நிலவுகிறது.

தனித்து போட்டி: பிஸ்வாஸ்

முன்னதாக பேசிய பிஸ்வாஸ், திமுகவுக்கு கருணாநிதியும், அதிமுகவுக்குஜெயலலிதாவும் மிகச் சிறந்த தலைவர்களாக இருப்பது போல பார்வர்ட் பிளாக்கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவுக்கு சிறந்த தலைவராக கார்த்திக் இருப்பார்.

வரும் சட்டசபைத் தேர்தலில் பார்வர்ட் பிளாக் கட்சி தமிழகத்தில் தனித்துப்போட்டியிடத் தயாராக இருக்கிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மிகப் பெரியசவாலாக பார்வர்ட் பிளாக் விளங்கும்.

தமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் முடி சூடா மன்னன் கார்த்திக். அவர் எடுக்கும்முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்றார் பிஸ்வாஸ்.

இதன்மூலம் சந்தானத்துடன் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை என்பதைதிட்டவட்டமாக அறிவித்தார் பிஸ்வாஸ்.

ஜெயலலிதாவை பிஸ்வாசும் கார்த்திக்கும் சந்தித்தபோது சந்தானத்தை மீண்டும்கட்சியில் சேர்த்துக் கொண்டு வந்தால் மட்டும் கூட்டணிக்கு சம்மதிப்போம் என்றுஅதிமுக நிபந்தனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் பேச்சு:

முன்னதாக கார்த்திக் பேசுகையில், எனக்கு இருப்பது இரண்டே இரண்டுவாய்ப்புகள்தான். ஒன்று சேர்ந்து போக வேண்டும் அல்லது தனித்து நிற்க வேண்டும்.இதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களை சந்தித்த பின்னர் நான் எடுக்கப் போகும் முடிவு, முத்துராமலிங்கத் தேவர்,நேதாஜி ஆகியோரின் மீது ஆணையிட்டு எடுக்கும் முடிவு என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+