கார்த்திக்குடன் குற்றாலத்தில் நடராஜன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்:

பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக்கை குற்றாலத்தில் வைத்துமுதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் சந்தித்து ரகசியபேச்சு நடத்தினார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக கார்த்திக் பொறுப்பேற்ற பிறகுகட்சியின் மாநில மாநாடு நெல்லையில் நடந்தது. ஆனால் பெரும் வன்முறைக்குமத்தியில் மாநாடு பாதியிலேயே முடிவடைந்தது.

மாநாட்டில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கார்த்திக் கேட்க,திரண்டிருந்த முக்குலத்தோரில் பெருவாரியானவர்கள் அம்மாவுடன் தான் கூட்டணிவைக்க வேண்டும் என்றனர்.

எனக்கும் அதே ஆசை தான்.. ஆனால் கட்சியின் நலனுக்காக தலைமை எடுக்கும்முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என கார்த்திக் கூறியபோது கூட்டத்தில்சலசலப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் செய்த கலாட்டாவால் கார்த்திக்கும், கட்சித்தலைவர்களும் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். பாதியிலேயேகூட்டத்தை விட்டு ஓடினர்.

இந் நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகஇருப்பதால், தனித்து போட்டியிட பார்வர்ட் பிளாக் தயார் என்று கட்சியின் அகிலஇந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சியைத் தொடரலாம் என்று கார்த்திக்தொடர்ந்து கூறி வருகிறார்.

இந் நிலையில் கார்த்திக், பிஸ்வாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நெல்லையிலிருந்துகுற்றாலம் சென்றனர். அங்கு அவர்களுக்காக புக் செய்து வைக்கப்பட்டிருந்தஹோட்டலுக்குச் செல்லாமல், நடராஜனுக்கு சொந்தமான பங்களாவுக்குச் சென்றனர்.

அங்கு, பிஸ்வாஸ், கார்த்திக், மேற்கு வங்க அமைச்சர் நரேந்திர நாத் உள்ளிட்டமுக்கிய தலைவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்,

அவர்களுடன் நடராஜனுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அதிமுக கூட்டணிகுறித்தும், சந்தானம் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் நிலை குறித்தும்ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பின்னர் கார்த்திக் உள்ளிட்டவர்கள் குற்றாலத்தியே தங்கினர். இன்றுமதுரை திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர்.

இதற்கிடையே அதிமுக தலைமையுடன் நடராஜன் பேசிவிட்டு முடிவைச் சொல்வார்என்று தெரிகிறது. இதன் பின்னரே கூட்டணி குறித்து கட்சியின் இறுதி முடிவைகார்த்திக் அறிவிப்பார்.

நெல்லையில் தனக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்துவிட்டு அதிமுக தலைமை தன்னைகூட்டணியில் சேர்க்கும் என கார்த்திக் நம்புகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+