போஸ்டரால் பாமக- ரஜினி ரசிகர்கள் டென்சன்
கோவை:
கோவையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோரைகடுமையாக விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பாமகவினருக்கும் ரஜினிரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
![]() |
ரஜினி சும்மா இருந்தாலும் அவரை கோதாவில் இறக்கிவிட அவரது ரசிகர்கள் பலவகைகளிலும் முயற்சித்து வருகின்றனர். இரண்டுக்கு மூன்று மூறை சூடு வாங்கியரஜினியோ அரசியலே வேண்டாம் என்று சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆனால், நேற்று அரசியலுக்கு வந்த விஜய்காந்த் ரசிகர்கள் எல்லாம் எம்எல்ஏ ஆகப் போகும் கனவில்பரபரப்பாக இயங்க, தங்களிடம் இப்போ வருவேன், அப்போ வருவேன், இதோ வந்துட்டேன் என்று ஓவராகபில்ட்-அப் கொடுத்த ரஜினி தேர்தல் நேரத்தில் இப்படி ஒரேயடியாக ஒதுங்கி நிற்பது அவர்களுக்கு எரிச்சலைக்கொடுத்துள்ளது.
தங்கள் தலைவரை தட்டி எழுப்ப பல வகைகளிலும் முயற்சித்து வருகின்றனர்.ஆனால், ரஜினி வருவதாகத் தெரியவில்லை.
இந் நிலையில் கோவையின் பல பகுதிகளில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன்அன்புமணி ராமதாஸ் ஆகியோரை கடுமையாக விமர்சித்து ரஜினி ரசிகர்கள் பெயரில்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக ஒட்டப்பட்டு வரும் இந்த சுவரொட்டிகளால் கோவையில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவை பாமகவினர் கொதிப்படைந்துள்ளனர். ஆனால், இந்தத் தேர்தலில்ரஜினி அமைதி காத்து வரும் நிலையில் ரசிகர்கள் என்ற பெயரில் வேறு யாரோ தான்இந்த போஸ்டர்களை ஒட்டியிருக்க வேண்டும் என பாமகவினரே கருதுகின்றனர்.
இந் நிலையில் இன்று கோவையில் நடந்த பாமக கூட்டத்தில் இதுகுறித்து விரிவாகவிவாதிக்கப்பட்டது.
அப்போது, ரஜினி ரசிகர்கள் இதை ஒட்டியிருக்க வாய்ப்பில்லை. ரசிகர்கள் என்றபோர்வையில் சில விஷமிகள்தான் இதை செய்திருக்க வேண்டும். இது குறித்து நாம்போலீஸில் புகார் கொடுக்கலாம். பதிலுக்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம்என்று பாமக தரப்பில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, ரஜினி ரசிகர்கள் பெயரில் ஒட்டப்பட்டசில சுவரொட்டிகளைபாமகவினர் கிழித்தெறிந்தனர். சில இடங்களில் ரசிகர்கள், பாமகவினர் இடையேமோதல் ஏற்படும் சூழலும் உருவானது.
சுவரொட்டி பரபரப்பால் கோவையில் போலீஸார் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications