இன்று வி.சி. தொகுதிகளை அறிவிக்கிறார் ஜெ?
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் அதிமுகவுடன் எந்தச்சிக்கலும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன்கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளை அடையாளம் காணும் பணி தீவிரமாகநடந்து வருகிறது.ஆனால், தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்வருகின்றன.
அதிமுகவிடம் தான் கேட்ட தொகுதிகளின் பட்டியலை திருமா நிருபர்களிடம்வெளியிட்டார். இதனால் கடுப்பான அதிமுக தலைமை, அவர் கேட்ட தொகுதிகளைஒதுக்காமல் வேறு தொகுதிகள் தர முடிவு செய்துள்தாகவும் இதனால் சிக்கல்எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதை திருமாவளவன் மறுக்கிறார். அவர் கூறுகையில், தொகுதிகள்ஒதுக்கீட்டில் எந்தச் சிக்கலும் இல்லை. சுமூகமாக நடந்து வருகிறது. நாங்கள்விரும்பும் தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் எங்களுக்கான தொகுதிகள்அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கிறோம்.
தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் தேர்வு நடைபெறும்.
மொத்தம் 492 பேர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடம்நேர்காணல் முடிந்துள்ளது. வருகிற 27ம் தேதி தேர்தல் அறிக்கையைவெளியிடுகிறோம் என்றார் திருமாவளவன்.
இன்று பெளர்ணமி என்பதால் இன்று கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பட்டியலைஅறிவித்துவிட முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டார்.
ஆனால், மதிமுக தொகுதிகள் ஒதுக்கீட்டு சிக்கல் இன்று காலை வரை தீரவில்லை.இன்று நல்ல நாள் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் பட்டியலை ஜெயலலிதாவெளியிடுவார் அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக சிக்கலும் தீர்ந்தால் விடுதலைச் சிறுத்தைகள் லிஸ்ட்டோடு அந்தப் பட்டியலும்வெளியாகலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications