For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் ஐக்கியமானார் ராஜ கண்ணப்பன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராஜ. கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் கட்சி திமுகவுடன் முறைப்படி இணைந்தது.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் கோனார் சமூகத்தினரை குறி வைத்து மக்கள் தமிழ்தேசம் ஆரம்பிக்கப்பட்டது. அத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைசந்தித்தார் கண்ணப்பன். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர விரும்பினார் கண்ணப்பன்.

ஆனால் ஜாதிக் கட்சிகளுக்கு சீட் தருவதில்லை என்று முடிவு செய்துள்ளதாககருணாநிதி கூறவே, தான் போட்டியிடுவதற்கு இடையூறாக உள்ள தனது கட்சியையேகலைத்து விட முடிவு செய்தார் கண்ணப்பன்.

அப்படியே திமுகவில் இணையப் போவதாக அறிவித்தார்.

இணைப்பு விழா சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நடந்தது. இதில்கருணாநிதி, ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்டி உள்ளிட்டதிமுகவினரும், ராஜ. கண்ணப்பன் உள்ளிட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சியினரும்கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கருணாநதி பேசுகையில், பொதுப் பணித்துறை அமைச்சர்களாகஇருந்தவர்கள் எல்லாம் (கருணாநிதி, துரைமுருகன், கண்ணப்பன்) இங்கே வந்துசேர்ந்துள்ளார்கள் என்று துரைமுருகன் கூறினார்.

நான் கூட அண்ணா அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராகஇருந்தவன்தான். எனவே பொதுப் பணியில் இருப்பவர்கள் எல்லாம் திமுகவுக்கு வரவேண்டும்.

பாலுக்குள் தயிர் இருக்கிறது. அதில் மோர் இருக்கிறது, வெண்ணை இருக்கிறது, நெய்இருக்கிறது. அதேபோல ராஜ கண்ணப்பன் என்ற பால், தயிராக இருந்து, மோராகமாறி, வெண்ணையாக உருவெடுத்து, இன்றைக்கு நல்ல உருக்கு நெய்யாக மாற்றம்பெற்றிருக்கிறது.

இது மணக்கும் நெய், சுவைக்கும் நெய், சூட்டினைக் குறைக்கும் நெய், சுகம் தரும்நெய், அத்தகைய நெய் உணவிலே கலக்கும்போது அந்த உணவுக்கே தனி ருசி.அதுபோல திமுகவுடன் ராஜ கண்ணப்பன் சேர்ந்திருப்பது ஒரு தனிச் சுவை.

நமக்கெல்லாம் தாய்க் கழகம் திராவிடர் கழகம். அதிலிருந்து உருவானதுதான் திராவிடமுன்னேற்றக் கழகம். திராவிட இயக்கங்கள் எல்லாம் இப்போது பிரிந்து கிடக்கின்றன.

அவை எல்லாம் ஒன்றாக இணைய முடியாவிட்டாலும் கூட, கம்யூனிஸ்ட் கட்சிகள்போல இணைந்து செயல்படக் கூடிய வாய்ப்பு உருவாக வேண்டும், அதை நான் காணவேண்டும் என நினைத்தேன். அது கூடி வரும் நிலையும் ஏற்பட்டது.

ஆனால் இப்போது பாதியிலேயே நின்று விட்டது. (வைகோவின் பிரிவை மனதில்வைத்து கருணாநிதி இப்படிப் பேசினார்)

ஆனால் ராஜ கண்ணப்பன் போன்றவர்கள் நாங்கள் இருக்கிறோம், அதை நாங்கள்பார்த்துக் காள்கிறோம் என்று கூறி திமுகவுக்கு வந்திருப்பது மனதுக்குதைரியமாகவும், இதயத்திற்குப் புதுத் தெம்பு தருவதாகவும் அமைந்துள்ளது.

சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் பெரிய கருப்பனின் அனுமதியோடு ராஜகண்ணப்பனை திமுகவில் இணைத்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X