கேரளாவின் தமிழகத்துக்கு எதிரான சட்டம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தாமல் தடுக்க வகை செய்யும்அவசரச் சட்ட மசோதா கேரள சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழக, கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை கேரள அரசுஏற்கவில்லை.

மாறாக உச்சநீதிமன்ற உத்தரவை கிடப்பில் போடும் வகையில் அவசரச் சட்டத்தைப்பிரயோகிக்க அது முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்த கேரள அரசு,நேற்று சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது. அப்போது, கேரள மாநிலநீர்ப்பாசனத் துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், கேரள மாநிலநீர்ப்பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது நேற்றும், இன்றும் விவாதம் நடந்தது. இதன் முடிவில் இன்றுகாலை சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, கேரள மாநில நீர்ப் பாதுகாப்பு ஆணையத்திற்கு பல்வேறு கூடுதல்அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கேரள மாநிலத்தில் உள்ளஅணைகளைப் பராமரிப்பது, பழமையான அணைகளை சீரமைப்பது, அகற்றுவதுஉள்ளிட்டவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு.

இந்த ஆணையத்திற்கு நீதித்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால்,ஆணையத்தின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவுக்கு சமமாக கருதப்படும்.

கேரள அரசின் சட்ட மசோதாவால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகேள்விக்குறியாகியுள்ளது. சட்ட மசோதாவுக்கு கேரள ஆளுனர், குடியரசுத் தலைவர்ஆகியோர் ஒப்புதல் வழங்கிய பிறகே அது சட்டமாகும்.

எனவே குடியரசுத் தலைவரை தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் அணுகி சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் தடுத்தால் மட்டுமே உச்சநீதிமன்றத் தீர்ப்பைமுழுமையாக அமல்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காய்கறியில் இருந்து உணவு தானியம் வரை தமிழகத்தையே சார்ந்துள்ள கேரளம், தமிழகத்தை பல வகைகளிலும்பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்ககு. கேரளாவைச் சேர்ந்த எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தான்தமிழகத்தில், குறிப்பாக சென்னை, பிளாட்பாரங்களில் கேரளத்தினரின் டீக் கடைகள் குண்டக்க மண்டக்கமுளைத்தன.

அதே போல தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக காவல்துறையில், கேரளத்தினர் ஆதிக்கம்அதிகம். இப்போது சினிமாவிலும் கேரள மயமாகிவிட்டது. இதற்கெல்லாம் நன்றிக் கடனாகவே தமிழகவிவசாயிகளின் வயிற்றில் அடிக்க இந்தச் சட்டத்தை கேரளா கொண்டு வந்துள்ளது போலும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+