கார்த்திக் கட்சியை திரி வைத்து உடைத்த ஜெ
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நடிகர் கார்த்திக் விரைவில் முடிவெடுக்கவேண்டும். காலம் தாழ்த்துவது நல்லதல்ல என்று கார்த்திக்குக்கு முன்பாகஜெயலலிதாவை சந்தித்து ஒரு சீட் வாங்கி விட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக்கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எல்.சந்தானம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டவுடன்,கட்சியிலிருந்தும், பொறுப்பிலிரும் நீக்கப்பட்டார் சந்தானம். இதை எதிர்த்து வழக்குத்தொடர்ந்து நீக்கத்திற்கு இடைக்காலத் தடை வாங்கினார் சந்தானம்.இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அவருக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
ஆனால், நீண்ட நாட்களாகக் காத்திருந்து ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டகார்த்திகிடம் கூட்டணி குறித்து ஜெயலலிதா பேச மறுத்துவிட்டார். சந்தானத்துடன்வந்தால் தான் ஆச்சு என்று கார்த்திக்குக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
என் கட்சியின் கூட்டணி குறித்து நான் தானே பேச வேண்டும், சந்தானத்தை எதுக்குகூட்டிட்டு வரணும் என்று கோபமாகிக் குழப்பிய கார்த்திக் தன்னை எப்படியும்கூப்பிடுவார்கள் என்று நம்பி போயஸ் கார்டன் வாசலை நோக்கி தவமிருந்தார்.
நடராஜனுடனும பேசினார். ஆனால், போயஸ் இறங்கி வரவே இல்லை.
இந் நிலையில் கட்சிகளை உடைப்பதையே இப்போது வேலையாக வைத்துள்ளஅதிமுக, கார்த்திக் கட்சியிலும் வெடிமருந்தை வைத்து திரியைப் பத்த வைத்தது.
கட்சி இரண்டாக டமால் ஆக, சந்தானத்தைக் கூப்பிட்டு அவரது பிரிவுடன் கூட்டணிஅமைத்துக் கொண்டு ஒரு சீட்டும் கொடுத்துவிட்டார் ஜெயலலிதா.
இந்த ஒரு சீட்டுக்காகத் தான் சந்தானமும் காத்திருந்தார். இதனால் இப்போது கூட்டணிஓவராகிவிட்டதால் சந்தோஷத்துடன் இருக்கிறார்.
ஆனால், கட்சித் தலைவராக தான் செயல்பட்டுக் கொண்டுள்ள நிலையில், சந்தானம்குறுக்கு சால் ஓட்டி ஜெயலலிதாவை சந்தித்து ஒரு சீட்டையும் வாங்கி விட்டதால்,கார்த்திக் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
இந் நிலையில் கார்த்திக்கை இன்னும் குழப்பி கொப்பளிக்கச் செய்யும் வகையில்பேட்டியளித்தார் சந்தானம். அதன் விரம்:
நம்பியவர்களுக்கு சாதனை செய்து கொடுக்கும் பெரிய தலைவர் புரட்சித் தலைவிஜெயலலிதா.
சட்டம் ஒழுங்கு நிலை, ஏழை, எளிய, விவசாய மக்களுக்கு செய்து வரும் பணிகள்,அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்பித் தருவது என முதல்வரின்சீரிய பணிகளைப் பார்த்துத்தான் நான் அம்மா அவர்களை ஆதரிக்க முடிவு செய்தேன்.
மீண்டும் ஜெயலலிதாவே ஆட்சிக்கு வருவார். எங்களது இயக்கம் அதிமுகவுக்குஎன்றும் உறுதுணையாக இருக்கும். முத்துராமலிங்கத் தேவரின் ஆதரவாளர்கள்அனைவரும் நிச்சயமாக மீண்டும் கருணைத் தாயை வெற்றியடையச் செய்துமுதல்வராக்குவார்கள்.
கட்சித் தலைவராக உள்ள கார்த்திக், நம்முடைய மக்கள் (முக்குலத்தோர்) எல்லோரும்அதிமுக பக்கம்தான் என்பதை உணர்ந்து எங்களுடன் முதலிலேயே வந்திருக்கவேண்டும்.
இன்னும் கூட காலம் தாழ்ந்து விடவில்லை. விரைவில் அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டு எங்களோடு வர வேண்டும், (அவரும் அதிமுக கூட்டணியைத் தானேவிரும்புகிறார்) அதிமுக பக்கம் வந்து விட வேண்டும் என்றார் சந்தானம்.












Click it and Unblock the Notifications