தமிழிலும் இனி யூபிஎஸ்சி தேர்வெழுதலாம்..!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசுப் பணிகளில் வேலைக்குச் சேர நடத்தப்படும் யூபிஎஸ்சி தேர்வுகளை இனி தமிழிலும் எழுத வழிபிறந்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யூனியன் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (யூபிஎஸ்சி)நடத்தும் இந்தத் தேர்வுகள் மூலம் தான் மத்திய அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதுவரை ஆங்கிலத்திலும், கூடவே இந்தியிலும் மட்டுமே இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால்ஆங்கிலத்தில் புலமை இல்லாத நிலையிலும் கூட இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசுப்பணிகளில் புக அதிக வாய்ப்பு ஏற்பட்டது.

போதிய திறமையும் அறிவும் இருந்து கூட இந்தி தெரியாததால், தமிழகம் உள்ளிட்ட பிற இந்தி பேசாத மாநிலமாணவர்கள் காலங்காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிலும் கடந்த 1999ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு திருத்தத்தின்படி இந்தி, ஆங்கிலம் தெரிந்தால்மட்டுமே யூபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது.

இதனால் ஆங்கிலம் வாயிலாக வருடத்துக்கு 400 பேர் வரை மத்திய அரசுப் பணிக்குத் தேர்வாகி வந்த தமிழகமாணவர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்தது (வெறும் 2 பேர் தன் 1999ல் தமிழகத்தில் இருந்து தேர்ச்சிபெற்றனர்)

மெயின் தேர்வில் இந்தி பேசுவோர் இந்தியில் விரிவான கட்டுரைகளை எழுதி தேறி விட, தமிழக மாணவர்கள்ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுத வேண்டிய நிலை உருவானது.

இதையடுத்து இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் கிளப்பினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் அவர் வாதாடினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில்அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இந்நிலையில் ஆட்சி மாறி மன்மோகன் சிங் பிரதமரான பின்னரும் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்தக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் வைகோ.

இந் நிலையில் கிளார்க், டைபிஸ்ட் மற்றும் சுருக்கெழுத்தர் ஆகிய பதவிகளுக்கான தேர்வை இந்தி, ஆங்கிலம்மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 18 தேசிய மொழிகளிலும் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+