குமரியில் விமான நிலையம்: அரசு முயற்சிக்குமா?
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனைத்துஉதவிகளையும் செய்யும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்பிரபுல் பட்டேல் உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மினுக்கு அவர்எழுதியுள்ள கடிதத்தில்,சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்கவேண்டும் என்ற தங்களது கோரிக்கை மிகவும் நியாயமானது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு முறையாக கோரிக்கை வைத்து கடிதம்அனுப்பினால் அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்துஒத்துழைப்பையும், உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் செய்யும் என்றுதெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications