கரகாட்டத்துடன் சீட் கேட்ட எம்எல்ஏ!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மயிலாடுதுறை தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், கரகாட்டம்,சிலம்பாட்டம், மேள தாளம் முழங்க பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்து சீட்கேட்டு விண்ணப்ப மனுவை அளித்தார்.

தமிழகத்தில் அரசியல் திருவிழா படு குஜாலாக களை கட்டியுள்ளது. தொகுதிப்பங்கீட்டில் அனைத்துக் கட்சிகளும் படு பிசியாக உள்ளன. மறுபுறம் சீட் கேட்டுவிண்ணப்பங்களை வாங்குவதும், நேர்காணல் நடத்துவதும் படு மும்முரமாக உள்ளது.

யாருடன் கூட்டணி என்று தெரியாத-புரியாத நிலையில் பாஜகவும்விண்ணப்பங்களை வேகம் வேகமாக வாங்கி வருகிறது. இதுவரை 700க்கும்மேற்பட்டோர் அக்கட்சியின் சார்பில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இன்று வித்தியாசமான முறையில் ஒரு விண்ணப்பம் பாஜக தலைமைஅலுவலகத்திற்கு வந்தது. மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், தனதுஆதரவாளர்கள் புடை சூழ தி.நகரில் உள்ள கட்சித் தலைமையகமான கமலாலயத்திற்குவந்தார்.

அவருடன் கரகாட்டம், சிலம்பாட்டம் ஆடும் கலைஞர்கள் ஆட்டத்திற்கேற்பஅசத்தலாக ஆட, மே தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் தலைமை அலுவலகத்திற்குள் வந்த ஜெகவீரபாண்டியன் விண்ணப்பமனுவை, கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம்வழங்கினார். முன்னதாக போக் சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் தனதுமனுவுக்கு சிறப்புப் பூஜைகளும் செய்தார்.

பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த வித்தியாச விண்ணப்ப மனு தாக்கல் அப்பகுதியையேகலக்கி விட்டது. அவருடன் எம்.எல்.ஏக்கள் எச்.ராஜா, கே.என்.லட்சுமணன்,மயிலாடுதுறை நகராட்சித் தலைவி தேன்மொழி ஆகியோரும் இருந்தனர்.

இன்றுடன் விண்ணப்ப மனு தாக்கல் பாஜகவில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. மே6ம் தேதி மாலை 5 மணி வரை இப்படிப்பட்ட அலம்பல்களை மக்கள் கண் குளிரபார்த்து ரசிக்கலாம்.

ஜெகவீரபாண்டியன் முதல்வர் ஜெயலலிதாவின் மிகத் தீவிரமான விசிறி என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+