செக்ஸ் டாக்டர் பிரகாஷ் மனு தள்ளுபடி
சென்னை:
பெண்களின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு பல லட்சம் பணம்சம்பாதித்த வழக்கிலிருந்து டாக்டர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேரை விடுவிக்கசென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இளம்பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவற்றை இன்டர்நெட்டில்பிரசுரித்தவர் டாக்டர் பிரகாஷ். இவரிடம் மாட்டிய பெண்களில் துணை நடிகைகள்,நர்சுகள், கல்லூரி மாணவிகள், விபச்சாரிகள் ஆகியோர் அடக்கம்.இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2002ம் ஆண்டு பிரகாஷ் கைது செய்யப்பட்டர்.அவருடன் சரவணன், விஜயக்குமார், ஆசிர் குணசிங் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை 5வது விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்குவிசாரணை மிகவும் மந்த கதியில் இருந்து வருகிறது. இந் நிலையில் நான்கு பேரும்சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், எங்கள் நான்கு பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கு இதுவரைவிசாரணைக்கே வரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணையின்றி நாங்கள்சிறையில் வாடி வருகிறோம்.
எங்களிடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டார் வடபழனி காவல்துறை உதவி ஆணையர்ராஜேந்திரன். அதை டாக்டர் பிரகாஷ் கொடுக்காத காரணத்தால் தான் இந்தப் பொய்வழக்கைப் போட்டு உள்ளே அடைத்துள்ளார்.
நாங்கள் அப்பாவிகள். எங்களை விடுவித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில்அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் ஏப்ரல் மாதத்திற்குள்இவ்வழக்கை விசாரித்து முடிக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.அதன்படி வேகமாக விசாரணை நடந்து வருகிறது. பெரும்பலான சாட்சிகள்விசாரிக்கப்பட்டு விட்டனர்.
இன்னும் 6 பேரை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே நான்கு பேர் மீதானவழக்கையும் தள்ளுபடி செய்ய முடியாது என்று வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள், பிரகாஷ் உள்ளிட்டோரின் கோரிக்கையை நிராகரித்துமனுவைத் தள்ளுபடி செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications