நடராஜ் மாற்றத்தை எதிர்த்து தேவாரம் வழக்கு
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை, தேர்தல் ஆணையம் இடமாற்றம்செய்ததை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசிறியான முன்னாள் டிஜிபிவால்டேர் தேவாரமும், இன்னொரு முன்னாள் டிஜிபி பொன். பரமகுருவும் மனுதாக்கல் செய்தனர்.
தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசி தன்னை அதிமுகவுடன்அடையாளப்படுத்திக் கொண்டதால் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்பொறுப்பில் இருந்து நடராஜை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இதையடுத்து அந்தப் பதவியிலிருந்து நடராஜ் மாற்றப்பட்டுள்ளார். கூடுதல்ஆணையர் டி.கே.ராஜேந்திரன் வசம் மாநகர காவல்துறையின் பொறுப்பு தற்காலிகமாகஒப்படைக்கப்பட்டுள்ளன.
நடராஜுக்குப் பதிலாக புதிய கமிஷ்னரை நியமிக்க இன்று மாலைக்குள் 3 அதிகாரிகள்கொண்ட பட்டியலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
நேர்மையான, நியாயமான அதிகாரியாகவே இருந்த நடராஜ், மேலும் சிலகாவல்துறையினரைப் போலவே ஆளும் தரப்புடன் அடையாளப்படுத்திக்கொண்டதால் சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
இந் நிலையில் நடராஜ் இடமாற்றம் குறித்து முன்னாள் டிஜிபியும், முதல்வர்ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளருமான வால்டேர் தேவாரம் கூறுகையில்,
யாரையும் அரசியல்ரீதியாக பின்பற்ற வேண்டும் என்று நடராஜ் கருத்துக் கூறவில்லை.அவர் கூறியது அவரது சொந்தக் கருத்து. அது தவறல்ல.
நடராஜ் மீது இதுவரை எந்த ஒரு புகாரும் வந்ததில்லை. யாருக்கும் பாரபட்சமாகஅவர் நடப்பதாக புகார் கூறப்பட்டதில்லை. ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகபுகார் இல்லை.
நல்ல அதிகாரியான அவரை இடமாற்றம் செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதுஎன்றார் தேவாரம்.
மற்றொரு முன்னாள் டிஜிபியான வைகுந்த் கூறுகையில், நடராஜ், முதல்வர் குறித்துப்பேசியது அவரது சொந்தக் கருத்து. அது வாக்காளர்களைத் திசை திருப்பும் என கூறமுடியாது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியல்ல. நடராஜ் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டால், கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரிகளின் மன உறுதியை அதுபாதிப்பதாக அமையும் என்றார்.
இந் நிலையில் நடராஜ் இடமாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்தேவாரம் பொது நல மனுவையும் தாக்கல் செய்தார். அதே போல பொன் பரமகுருவும்ஒரு மனு தாக்கல் செய்தார்.
தேவாரம் தாக்கல் செய்த மனுவில், முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆணையர் நடராஜ்தெரிவித்துள்ள கருத்து அவரது சொந்தக் கருத்து. இது வாக்காளர்களை திசை திருப்பும்என்று கருத முடியாது. இந்தப் பேட்டியிலும் தவறில்லை.
ஆணையர் நடராஜை இடமாற்றம் செய்து உத்தரவிட தேர்தல் ஆணையத்திற்குஅதிகாரம் இல்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார் தேவாரம்.
இந்த மனு இன்று மாலை நீதிபதி மிஸ்ரா, நீதிபதி இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் முன்விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்ராஜகோபால், நடராஜுக்கு பதில் புதிய கமிஷ்னரை நியமிக்க வரும் 23ம் தேதி வரைதமிழக அரசுக்கு அவகாசம் தரத் தயாராக இருக்கிறோம். இதனால் இன்றேபட்டியலைத் தர வேண்டியதில்லை என்றார்.
இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications