நடராஜ் மாற்றம்-கலாமுக்கு வைகோ கோரிக்கை
சென்னை:
மாநில காவல்துறையின் செயல்பாட்டில் தேர்தல் ஆணையம் தேவையில்லாமல்மூக்கை நுழைக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர்அப்துல் கலாமுக்கு, மதிமக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மாநில காவல்துறையின் செயல்பாட்டில் தேர்தல் ஆணையம்தலையிடுவது நியாயமற்றது.சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவுதேவையற்றது. இந்த விவகாரத்தில் தலையிட்டு தேர்தல் ஆணையத்திற்கு உரியஅறிவுரையை வழங்க வேண்டும் என்று அக்கடிதத்தில் வைகோ கோரியுள்ளார்.
நடராஜைக் காக்க அரசு தீவிரம்:
இதற்கிடையே நீதிமன்ற ஆணைப்படி நடராஜின் இடமாற்றம் 23ம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதால் சிக்கலில் மாட்டியுள்ளார் நடராஜ்.அவரது பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இருந்ததால் தேர்தல் ஆணையம்அவரை இடமாற்றம் செய்தது.
ஆனால், ஜெயலலிதாவின் விசிறியான முன்னால் டிஜிபி வால்டேர் தேவாரமும்,இன்னொரு மாஜி டிஜிபி பரமகுருவும், தமிழக உள்துறைச் செயலாளர் பவன்ரெய்னாவும், நடராஜ் இடமாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, இப்ராகிம் கலிபுல்லா முன் விசாரணைக்குவந்தபோது தேவாரம், பரமகுரு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன்வாதிடுகையில்,
தேர்தல் தேதியைத் தான் தறபோது அறிவித்துள்ளார்கள். தேர்தல் தொடர்பானமுறையான அறிவிப்பு ஏப்ரல் 13ம் தேதிதான் வெளியாகிறது. அன்று முதல்தான்அதிகாரிகளுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும்.
தேர்தல் நடத்தை விதிகள் என்பது அரசியல் கட்சிகளுக்கும்,வேட்பாளர்களுக்கும்தான். அதிகாரிகள் இந்த வரம்புக்குள் வர மாட்டார்கள் என்றார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், ஆணையர்நடராஜின் கருத்து ஒரு தரப்புக்கு சாதகமாக இருக்குமோ என்ற அச்சம்மற்றவர்களுக்கு எழுந்துள்ளது. தேர்தல் தேதியை அறிவித்த நாள் முதலே நடத்தைவிதிகளும் அமலுக்கு வந்து விடும்.
எனவே மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் விதமாக தேர்தல் ஆணையம்செயல்படவில்லை.
இந்த வழக்கை சம்பந்தப்பட்டவர் போடவில்லை. வேறு யாரோதான்போட்டிருக்கிறார்கள். எனவே இது விசாரணைக்கே உகந்ததல்ல என்று வாதிட்டார்.
பின்னர் அரசுத் தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் வாதிடுகையில், மினிஎமர்ஜென்சியைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஆணையர் நடராஜைமாற்ற வேண்டும் என்று மட்டுமே தேர்தல் ஆணையத்தின் உத்தரவில்கூறப்பட்டுள்ளது.
அவர் மீதான புகார் குறித்தோ, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதா என்பது குறித்தோஅந்த உத்தரவில் எதுவும் இல்லை. மேலும் வேறு ஒருவரை நியமிக்க பட்டியல்தருமாறும் மாநில அரசிடம் கேட்டுள்ளது. அப்படிக் கேட்க தேர்தல் ஆணையத்துக்குஉரிமை இல்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மிஸ்ரா, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிடலாமா அல்லது இடைக்கால தடை விதிக்கலாமா என்று கேட்டார்.
அதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராஜகோபால் பதிலளிக்கையில்,செவ்வாய்க்கிழமை விரிவாகப் பதிலளிக்கிறோம். அதுவரை எந்த உத்தரவும்பிறப்பிக்க வேண்டாம் என்றார்.
அப்போது, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா தாக்கல் செய்துள்ளமனுவும் சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசுத் தலைமை வழக்கறிஞர்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில், தேர்தல் ஆணைய வழக்கறிஞர்ராஜகோபால், புதிய ஆணையரை நியமிப்பதற்கான 3 பேர் கொண்ட பட்டியலைவரும் 23ம் தேதி வரை கேட்டு வற்புறுத்த மாட்டோம் என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும்இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம், மாநிலத்தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழக அரசு, ஆணையர் நடராஜ் ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications