ஜெயா டிவிக்கு மத்திய அரசு டெலிபோர்ட் உரிமம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயா டிவி தனது நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்காக, டெலிபோர்ட்வசதியைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமத்தை வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதைத் தொடர்ந்து இதுதொடர்பாக ஜெயா டிவி தொடர்ந்த வழக்கை சென்னைஉயர்நீதிமன்றம் பைசல் செய்து உத்தரவிட்டது.

ஜெயா டிவியின் சார்பில் ஜெயா நியூஸ் என்ற 24 மணி நேர செய்தித்தொலைக்காட்சியை துவக்க குடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையும், இப்போதைய ஜெயா டிவிஅலைவரிசையையும் நேரடியாக தனது சொந்த டெலிபோர்ட் வசதியின் மூலம்ஒளிபரப்ப முடிவு செய்து ரூ. 5.50 கோடி மதிப்பில் டெலிபோர்ட் கருவிகளை ஜெயாடிவி நிர்மாணித்தது.

இதை இயக்குவதற்கு மத்தியதொலைத் தொடர்புத் துறை உரிமம் வழங்க வேண்டும்.இதற்காக விண்ணப்பித்த ஜெயா டிவிக்கு உரிமம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ஜெயா டிவி நிறுவன பங்குதாரர்களில் சிலர் குறித்து திமுகவைச் சேர்ந்த எம்.பி.செ.குப்புசாமி மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் புகார் கொடுத்ததால், உரிமம்வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜெயா டிவி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக 6வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று தொலைத் தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி ஜெயா டிவியின் மனுவைப் பரிசீலித்த தொலைத் தொடர்புத் துறை,உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளது.

அதில், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், ஜெயா டிவியின் டெலிபோர்ட்வசதிக்கு உரிமம் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதில் மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் முன்னிலையில் வந்தது.

அப்போது ஜெயா டிவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிபந்தனைகளை பூர்த்தி செய்தபின்னர் உரிமம் வழங்குவதற்கு காலக் கெடுவை உயர்நீதிமன்றம் நிர்ணயிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்ற நீதிபதிகள், ஜெயா டிவி, மத்திய தொலைத் தொடர்புத் துறை விதிக்கும்நிபந்தனைகளை பூர்த்தி செய்த 2 வாரங்களுக்குள் உரிமத்தை வழங்க வேண்டும்என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை பைசல் செய்வதாக அறிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+