கண்ணனின் கட்சி இரட்டை இலையில் போட்டி?

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

புதுவையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களது கட்சி தயங்காதுஎன்று புதுவை அதிமுக கூட்டணியில் சேர்ந்ள்ள புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ்தலைவர் கண்ணன் கூறியுள்ளார்.

புதுவை அதிமுக கூட்டணியில் கண்ணனின் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இக்கூட்டணியில், அதிமுக 16 தொகுதிகளிலும், கண்ணன் கட்சி 10 தொகுதிகளிலும்,மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தொகுதிகள் ஒதுக்கீட்டுக்கு சென்னை சென்றிருந்த கண்ணன் அதை வெற்றிகரமாகமுடித்துக் கொண்டு புதுவை திரும்பிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு புதுவையில் அமோகவெற்றி கிடைக்கும். அதைப் பெற்றுத் தர வேண்டியது எங்களது பொறுப்பாகும்.

தேர்தல் தொடர்பாக, கூட்டணி தொடர்பாக, தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்வர்ஜெயலலிதா மிகுந்த தாராள மனதுடன் நடந்து கொண்டார். அது திருப்தியையும்,மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

எங்களது கட்சி முறையாக பதிவு செய்து கொண்ட கட்சிதானே தவிர,அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. எனவே தனிச் சின்னம் கோர மாட்டோம்.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடவும் தயங்க மாட்டோம்.எனக்கோ, எனது கட்சிக்கோ இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட எந்தஆட்சேபனையும் இல்லை.

தொடர்பான செய்திகள்பு மக்கள் தலைவர் வ.சுப்பையா (புதுவை தலைவர்), குபேர் ஆகியோர்மக்கள் முன்னணி என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி அதில் சில கட்சிகளைகூட்டணியில் சேர்த்து, ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட்டு முன்னோடியாகத்திகழ்ந்துள்ளார்கள்.

எனவே இரட்டை இலைச் சின்னத்தின் கீழ் போட்டியிட நாங்கள் தயாராகவேஇருக்கிறோம் என்றார் கண்ணன்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் சட்டப்படி, கண்ணன் கட்சிவேட்பாளர்களும் அதிமுக வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+