எங்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுங்களேன்: பாஜக
சென்னை:
திமுக, அதிமுக என மாற்றி மாற்றி வாக்களித்து ஏமாந்து விட்டீர்கள். எனவே வரும்சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பாருங்கள் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நிாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக பொதுக்கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள புல்லாரெட்டிஅவென்யூவில் டந்தது. கட்சியின் தேர்தல் பிரசாரத் தொடக்க நிகழ்ச்சியாகவும் அந்தக்கூட்டம் அமைந்தது. அகில இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கு வாய்ப்பளித்துவிட்டீர்கள். ஆனால் ஒரு பலனையும் நீங்கள் இதுவரை காணவில்லை. உங்களதுவாழ்க்கைத் தரம் இன்னும் அப்படியேதான் உள்ளது. எனவே இம்முறை பாஜகவுக்குவாய்ப்பளித்துப் பாருங்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பொக்ரானில் அணுகுண்டுவெடித்து சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் உலக வல்லரசு நாடாக இந்தியாஉருவாகியுள்ளது.
இன்று அமெரிக்காவே இறங்கி வந்து நம்மை அங்கீகரிக்கும் நிலைக்கு வந்துள்ளது.இதுபோல எண்ணற்ற சாதனைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிநிறைவேற்றியுள்ளது.
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது மதவாதத்தைத் தூண்டும்செயலாகும். இதன் மூலம் நாட்டையும், மக்களையும் பிரிக்க காங்கிரஸ் சதி செய்கிறது.மதவாதக் கட்சியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது காங்கிரஸ் என்றார்சிங்.
கூட்டத்தில் இல.கணேசன், மாஜி அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக தேர்தல்பொறுப்பாளரான ராஜீவ் பிரதாப் ரூடி, பண்டாரு தத்தாத்ரேயா,பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும்பேசினர்.
கூட்டணிக்கு யாரும் கூப்பிடலை:
இந் நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத், கூட்டணி அமைப்பதுதொடர்பாக இதுவரை எந்தக கட்சியும் எங்களை அணுகவில்லை. நாங்களும்கூட்டணிக்காக ஏங்கியதும் இல்லை. எனவே தற்போதைய நிலையில், தமிழகம்மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம்.
கூட்டணி அமைக்க எந்தக் கட்சியாவது முன் வந்தால் அதன் சாதக, பாதகங்களைஆராய்ந்து முடிவெடுப்போம். இதுவரை கூட்டணி தொடர்பான சிந்தனையேஎங்களிடம் இல்லை என்பதே உண்மை.
விஜய்காந்துடன் கூட்டணி அமைப்பது குறித்தெல்லாம் மாநில நிர்வாகிகள் தான்முடிவெடுப்பார்கள்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிடவுள்ளோம். மதன்லால் குரானாவின் போக்கு ஒழுக்கக் கேடாக நடந்ததால்தான் (உமா பாரதிக்கு ஆதரவாகப் பேசியது) இருந்ததால்தான் அவரை கட்சியிலிருந்துநீக்கியுள்ளோம். ஒழுக்கக் கேட்டை கட்சிக்குள் அனுமதிக்க முடியாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications