ஜெயலலிதாவும்.. மக்கள் கூட்டணியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களுடன்தான் எனது கூட்டணி என்று கூறி வந்த முதல்வர் ஜெயலலிதா,பாண்டிச்சேரியில் தனது கூட்டணிக்கு ஜனநாயக மக்கள் கூட்டணி என்றே பெயர்வைத்துள்ளார். தேர்தல் கூட்டணிக்கு ஜெயலலிதா பெயர் சூட்டுவது இது 2வதுமுறையாகும்.

தமிழத்திலும் தனது கூட்டணிக்கு ஜெயலலிதா இந்தப் பெயரையே சூட்டுவார் என்றுதெரிகிறது.

2001ம் ஆண்டு நிடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன், தமிழ் மாநில காங்கிரஸ்,காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பற்ற ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி என்று ஜெயலலிதா பெயர் சூட்டினார்.

தேர்தல் கூட்டணிக்கு அவர் பெயர் சூட்டியது அதுவே முதல் முறை.

2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக தனித்து விடப்பட்டது.அதனுடன் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த அத்தனை கட்சிகளும்திமுக தலைமையில் திரண்டு தேர்தலை சந்தித்தன. திமுக தனது கூட்டணிக்குஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் சூட்டியது.

அந்தத் தேர்தலை பாஜகவுடன் சேர்ந்து சந்தித்தார் ஜெயலலிதா. வேறு எந்தக் கட்சியும்கூட்டணியில் இடம்பெறவில்லை. இதனால் கூட்டணிக்கு அவர் பெயர் கூடசூட்டவில்லை. அந்தத் தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.

இந் நிலையில் இப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள ஜெயலலிதாகடந்த 1 வருடமாக மக்களுடன்தான் கூட்டணி என்று பேசி வந்தார்.

ஆனால், திமுகவின் 7 கட்சிக் கூட்டணியை உடைத்து கட்சிகளை இழுக்க முயன்றார்.காங்கிரஸை, பாமகவை உடைத்தார். தனியே போட்டியிடுபவர்களை இழுத்துப்போட்டார்.

இப்போது தமிழக தொகுதிப் பங்கீட்டை பேசி வரும் அவர் புதுவைக்கான தொகுதிப்பங்கீட்டையும், ஒதுக்கீட்டையும் முடித்துவிட்டார்.

இதுவரை மக்களுடன் தான் என்று கூறி வந்தவர் தனது புதுவை கூட்டணிக்குஜனநாயக மக்கள் கூட்டணி என்று பெயர் வைத்துள்ளார்.

புதுவை: திணறும் திமுக

இந் நிலையில் புதுவையைப் பொறுத்தவரை கூட்டணி குறித்து திமுக இன்னும் எந்தமுடிவும் எடுக்காமல் உள்ளது.

கூட்டணியை முடிவு செய்துவிட்ட அதிமுக தொகுதிப் பங்கீட்டையும் அறிவித்துவிட்டது.

ஆனால் மறுபுறம் திமுக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதேதெரியவில்லை.

ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக சேருமாஅல்லது திமுக தனியாக கூட்டணி அமைத்து அதில் பாமகவை சேர்க்குமா என்பதுதெரியவில்லை.

கட்சி புதுவையில் மிகப் பெரும் வலிமையுடன் இருப்பதால் திமுக தேவையில்லைஎன்று காங்கிரஸ் கருதுகிறது.

அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம்காட்டவில்லை.

பெரும்பாலும் திமுகவும், பாமகவும் சமமாக இடங்களைப் பகிர்ந்து கொண்டு தனிக்கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+